பிரிந்தது உடல் மட்டும்தான் என கணவரின் இறப்பு குறித்து உருக்கமாக பதிவு செய்துள்ளார் ஸ்ருதி ஷண்முகப்பிரியா.

தமிழ் சின்னத்திரையில் நாதஸ்வரம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ருதி ஷண்முகப்பிரியா. இதைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்த இவர் கடந்த வருடம் அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகி ஒரே வருடமான நிலையில் இவர் அரவிந்த் சேகர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இப்படியான நிலையில் ஸ்ருதி சண்முகப்பிரியா தன்னுடைய கணவரின் மரணம் குறித்து உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

இது குறித்த அவரது பதிவில் “பிரிந்தது உடல் தான், ஆனால் உங்கள் ஆன்மாவும் மனமும் என்னைச் சூழ்ந்து கொண்டு, இப்போதும்… எப்போதும் என்னை பாதுகாக்கிறது என் காதலே அரவிந்த். உங்கள் மீதான என் அன்பு இப்போது, மேலும் மேலும் அதிகரித்துள்ளது. நாம் ஏற்கனவே ஒருவருக்கொருவர் நல்ல நினைவுகளை வைத்திருந்தோம். அதை நான் வாழ்நாள் முழுவதும் மதிக்கிறேன். உன்னை மிஸ் செய்கிறேன். மேலும் உன்னை அதிகம் நேசிக்கிறேன் அரவிந்த். என் அருகில் நீங்கள் இருப்பதை உணர்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் பலரும் வருத்தத்தோடு ஸ்ருதி சண்முகப்பிரியாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.