பாரதி கண்ணம்மா 2 சீரியல் வில்லியாக நடிக்கும் ஷர்மிளா யார் என தெரிய வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா முதல் சீசனின் முடிவை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் நாயகன் பாரதி வீட்டில் சௌந்தர்யாவின் அண்ணியாக வசித்து வருபவர் ஷர்மிளா. சீரியலில் மெயின் வில்லியாக என்ட்ரி கொடுக்க உள்ள வெண்பாவின் அம்மா தான் இவர்.

இந்த ஷர்மிளா கதாபாத்திரத்தில் நடிப்பவர் சூப்பர் ஹிட் படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஆமாம் தமிழ் சினிமாவில் நடிகர் முரளி, வடிவேல் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற காமெடி திரைப்படமான சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் நாயகியாக நடித்தவர் தான் நடிகை ராதா.

இது படத்துக்குப் பிறகு கேம், அடவாடி, என்ன சிறு படங்களில் நடித்து வந்த இவர் அதன் பிறகு வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார் என தெரிய வந்துள்ளது.