பேக்கை தூக்கி கொண்டு கண்ணம்மா வீட்டை விட்டு கிளம்ப கடைசியில் ட்விஸ்ட் ஒன்று காத்துக் கொண்டிருந்தது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சௌந்தர்யா பாரதிக்கு கல்யாணம் நின்று போனதை நினைத்து வருத்தத்தோடு சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்க அப்போது வரும் பாரதி சௌந்தர்யாவுக்கு ஆறுதல் சொல்கிறான்.

பிறகு சௌந்தர்யா உங்கப்பா எப்படிப்பட்டவர் தெரியுமா அவர் நடந்து போன ஊர்ல இருக்க எல்லோரும் கையெடுத்து கும்பிடுவாங்க நீயும் அந்த மாதிரி ஒரு நிலைமைக்கு வரணும் என்பதுதான் என்னுடைய ஆசை என சொல்ல நீங்க ஆசைப்படுற மாதிரி கண்டிப்பா நான் மாறுவேன் கொஞ்சம் கொஞ்சமா என்னுடைய கெட்ட பழக்கங்களை விட்டு விடுறேன் என வாக்குறுதி கொடுக்கிறான். இதைக் கேட்ட ஷர்மிளா என்ன இவன் இப்படி சொல்கிறான் என வருத்தப்பட விஜய் நான் உன்ன திருந்த விட மாட்டேன் என சொல்கிறான்.

இந்த பக்கம் கண்ணம்மா உண்மையான கண்ணம்மாவின் போட்டோவை பார்த்துக் கொண்டு என்னால இந்த வீட்ல நிறைய பிரச்சனை அப்பா ரொம்ப வருத்தப்படுறாரு, அதனால வீட்டை விட்டு கிளம்பலாம் என்று முடிவு பண்ணி இருக்கேன் என சொல்லி பேக்கை தூக்கி கொண்டு கிளம்ப அப்போது கண்ணம்மாவின் அம்மா இரும்பல் வந்து முடியாமல் தவிக்க கண்ணம்மா ஓடிப்போய் மருந்து கொடுத்து அவரை தேற்றுகிறார்.

அவர் கண்ணம்மாவின் முகத்தைப் பார்த்து அழுதுகிட்டு இருந்தியா உங்க அப்பாவுக்கு பாசத்தைக் கூட கோபமாகத்தான் காட்ட தெரியும் அவர் திட்டுனதுக்காக நீ வீட்டை விட்டு போயிடாத அப்புறம் நான் பழையபடி படுத்த படுக்கையா ஆகி அப்படியே போய் சேர்ந்திடுவேன் என சொல்ல கண்ணம்மா நான் போக மாட்டேன் என வாக்கு கொடுக்கிறார்.