கண்ணம்மாவாக வந்த சித்ரா மீது மதுவுக்கு சந்தேகம் வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கண்ணம்மாவாக வந்த சித்ரா அம்மாவுக்கு கஞ்சி ஊட்டிக் கொண்டிருக்க அப்போது வரும் மது கண்ணை மூடி நான் யாருன்னு கண்டுபிடி என சொல்ல அங்கு வரும் அகிலன் என்ன மது அக்கா என குரல் கொடுக்க கண்ணம்மா வாயாடி மது என கூறுகிறார்.

பிறகு கண்ணம்மாவின் அக்கா அகிலனிடம் மருந்து வாங்கிட்டு வர சொல்ல அவன் என்னால முடியாது என சொல்லிவிட்டு கிளம்ப மது நான் தான் வண்டி எடுத்துட்டு வந்து இருக்கேன் நானும் கண்ணம்மாவும் போய் வாங்கிட்டு வரோம் என இருவரும் கிளம்பி செல்கின்றனர்.

மறுபக்கம் பாரதி ரோட்டில் நின்று குடித்துக் கொண்டிருக்க அங்கு வரும் தம்பதி ஒருவர் குழந்தையை மருத்துவமனையில் அனுமதி இருப்பதாக சொல்ல மருத்துவ செலவுக்காக பாரதி ஏற்பாடு செய்கிறார். அடுத்து மதுவும் கண்ணம்மாவும் ஒரு இடத்தில் நின்று பேசிக் கொண்டிருக்க அப்போது ஒரு பெண்மணி சித்ரா என கூப்பிட உடனே கண்ணம்மா திரும்பிப் பார்க்க மதுவுக்கு சந்தேகம் வருகிறது.

உண்மையில் வந்திருப்பது கண்ணம்மா தானா என கண்டுபிடிக்க வேண்டும் அதற்காக டெஸ்ட் வைக்க வேண்டும் என முடிவெடுக்கிறார். மறுபக்கம் சௌந்தர்யாவின் அண்ணன் பாரதிக்கு வெண்பாவை கல்யாணம் பண்ணி வைக்கலாம் என சொல்ல சௌந்தர்யா எனக்கும் இந்த யோசனை தோன்றியது ஆனால் அது சரிப்பட்டு வராது என கூறுகிறார்.

காரணம் சின்ன வயசுல இருந்து பாரதிக்கு பிடிக்கிறது வெண்பாவுக்கு பிடிக்காது இருவரும் வேற வேற ரசனை கொண்டவங்க, அவங்கள கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி அவங்க வாழ்க்கையை நாசம் பண்ணிட கூடாது என சொல்ல ஷர்மிளா அதிர்ச்சி அடைகிறார். பிறகு தன்னுடைய மகன் விஜய்யிடம் எப்படியாவது அஞ்சலியை கல்யாணம் பண்ற வழிய பாரு என சொல்கிறார்.

அடுத்து மது கண்ணம்மாவை ஒரு குளத்தின் அருகே அழைத்துச் சென்று நாம் இங்கே குளிக்க வருவோம் எந்த கரையில குளிப்போம் சொல்லு பார்க்கலாம் என கேட்க கண்ணம்மா யோசித்து ஒரு பக்கத்தை காட்ட மதுவின் முகம் மாற உடனே கண்ணம்மா அந்தக்கரை என மாற்றி சொல்ல மது கரெக்டா சொல்லிட்ட நீ கண்ணம்மாவே தான் என சந்தோஷப்பட சித்ரா நிம்மதி அடைகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.