ஜெயிலர் அம்மாவிடம் சித்ரா சிக்க உண்மை அறிந்த கண்ணம்மாவின் அம்மா உயிரை விடுகிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணம்மா சௌந்தர்யாவிடம் எல்லா உண்மைகளையும் சொல்ல அவங்க ரெண்டு பேரும் இவ்வளவு பண்ணி இருக்காங்களா என சொல்லிக் கொண்டிருக்க கண்ணம்மா செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறார்.

பிறகு பள்ளியில் நடக்கும் விழாவுக்காக ஸ்பெஷல் கெஸ்ட் வந்து விட்டதாக செல்வம் வந்து அழைக்க சௌந்தர்யா உன்னிடம் நிகழ்ச்சி முடிந்ததும் வந்து பேசுகிறேன் என சொல்லி கிளம்பிச் செல்ல கண்ணம்மா வெளியே காத்துக் கொண்டிருக்கிறேன் அப்போது சீப் கெஸ்ட் ஆக ஜெயிலர் அம்மா வந்து இறங்குகிறார்.

இதைப் பார்த்த கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறாள். அவர்கள் கண்ணில் படாமல் இருக்க வேண்டும் என அந்த இடத்தை விட்டு நகர முயல அப்போது சண்முகம் வாத்தியார் அங்கே வந்து எங்க போற? இங்க தானே இருக்க சொன்னாங்க தடுத்து நிறுத்துகிறார்.

ஒரு கட்டத்தில் ஜெயிலர் அம்மா கண்ணம்மாவை பார்த்து சித்ரா என கத்தி கீழே கூப்பிட கீழே இறங்கி வரும் கண்ணம்மா அவர்களைப் பார்த்து திருத்திருவென முழிக்க சௌந்தர்யா உட்பட எல்லோரும் இது சித்ரா இல்ல கண்ணம்மா என சொல்கின்றனர்.

ஆனால் சப் ஜெயிலர் மேடம் இது சித்ரா தான். கொஞ்சம் நாள் முன்னாடி தான் ஜெயிலிலிருந்து ரிலீஸ் ஆகி வெளியே வந்தாள்‌. ஆனால் இவளை கொன்று விட்டதாக செய்தியில் நியூஸ் வந்தது. கண்ணம்மா என்ற பெயரில் இங்கு வந்து ஒளிந்து கொண்டு இருக்கா என சொல்ல சண்முக வாத்தியார் உண்மையை சொல்லு என கேட்கிறார். கண்ணம்மா மன்னிச்சிடுங்க நான் சித்ரா தான், கண்ணம்மா என்னை காப்பாத்திட்டு உயிரை விட்டுட்டு என சொல்ல இதை கேட்டு அதிர்ச்சி அடையும் சண்முக வாத்தியார் அப்படியே நெஞ்சு வலியில் கீழே விழுகிறார்.

அடுத்து மது இந்த விஷயத்தை வீட்டில் வந்து சொல்ல கண்ணம்மா இறந்து போனதாக உண்மை அறியும் அவளது அம்மா அப்படியே அதிர்ச்சியில் உயிரை விடுகிறாள். கடைசியில் பார்த்தால் இது அனைத்தும் கண்ணம்மாவின் பிரம்மை என தெரிய வருகிறது.

பிறகு சண்முக வாத்தியார் சீப் கெஸ்ட்டுக்கு கொடுக்க வேண்டிய கிப்ட் உடைந்து போனதாக சொல்ல சௌந்தர்யா அதே போன்ற கிப்ட் பங்க்ஷன் முடிவதற்குள் வந்தாக வேண்டும் என உத்தரவிட சண்முகம் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க கண்ணம்மா இதே போல நான் செய்து தருகிறேன் என சொல்லி அதற்கான பொருட்களை வாங்கி செய்து கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.