பாரதியை பழிவாங்க கண்ணம்மா செய்த வேலையால் கல்யாணம் நின்று போனது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா சீசன் 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாரதி மற்றும் விஜய் என இருவரும் கடை திறப்பு விழாவுக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது கடை குறித்து சந்தோஷமாக பேசி வர விஜய் எப்படியாவது பாரதியை குடிக்க வைக்க முயற்சி செய்ய பாரதி அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறான்.

காரில் வேகமாக வந்து கொண்டிருக்க திடீரென கண்ணம்மா சைக்கிளில் எதிரே வந்துவிட விஜய் பிரேக்கை போட கண்ணம்மா கண்ணு மண்ணு தெரியாம இப்படியா வேகமாக வருவீங்க என சண்டை போட பாரதி இப்ப நான் சண்டை போடுற ரூட்ல இல்ல நல்ல விஷயத்துக்கு போயிட்டு இருக்கேன் உன் முகத்தில் முழிச்சிட்டு போன எப்படி நல்லது நடக்கும் என திட்ட விஜய் இனிமே எங்க முகத்திலேயே முழிக்க கூடாது என சொல்லிவிட்டு கார் எடுத்துக்கொண்டு கிளம்புகின்றனர்.

பிறகு இருவரும் ஒரு கடை அருகே நின்று கொண்டிருக்க அங்கு வரும் கண்ணம்மா இவங்களை பழிவாங்க வேண்டும் என பாரதிக்கு போன் போட பாரதி போன் எடுக்காமல் இருக்கிறான். பாரதி பிஸியா இருக்கான் போல இவங்களுக்கு நாமளே பாடம் கற்பிக்கணும் என் முகத்தை பார்த்துட்டு போன நல்ல காரியம் நடக்காதுனா சொன்னீங்க, நடத்திறேன் என சீட்டின் மீது கம்மை வாங்கி தடவி விடுகிறார்.

பிறகு இருவரும் காரில் வந்து பெண் வீட்டில் இறங்க முயற்சி செய்ய இருவருக்கும் முதுகுப்புறம் துணி கிழிகிறது. இதனால் இருவரும் வீட்டுக்குள் செல்லாமல் இருக்க ஒரு கட்டத்தில் எல்லோரும் வெளியே வந்து பாரதியை உள்ளே கூப்பிட பாரதி எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க பெண் வீட்டார் பேசுவதை வைத்து ஷர்மிளா பிரச்சனையை உண்டாக்கி இந்த சம்பந்தமே வேண்டாம் என சொல்ல வைக்கிறார்.

பிறகு சௌந்தர்யா ஏன்டா இப்படி நிக்குற எதுக்காக உள்ளே வரல என கேட்க முதுகில் துணி கிழிந்து இருப்பதை திரும்பி காண்பிக்க அதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.