தன்னை அசிங்கப்படுத்திய கண்ணம்மாவை பழிவாங்க துடிக்கிறார் பாரதி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கண்ணம்மா மற்றும் மது என இருவரும் வெளியே சென்று இருந்தபோது மது மீண்டும் ஒரு ஆற்றங்கரை அருகே அழைத்துச் சென்று இங்கு ஒரு மறக்க முடியாத விஷயம் நடந்தது அது என்ன என கேட்க திரு திருவெணமுழிக்க பிறகு மது கொடுத்த குழுவை வைத்து நீச்சல் தெரியாமல் என எதையோ சொல்ல வர மது கரெக்டா சொல்லிட்ட நான் நீச்சல் தெரியாம அடிச்சிட்டு போனப்ப என்ன நீ தான் காப்பாத்துன என சொல்கிறார்.

பிறகு எல்லா விஷயமும் அப்படியே ஞாபகத்துல வச்சிக்கிட்டு இருக்க நீதான் என் கண்ணம்மா நான் வச்ச டெஸ்ட்ல நூற்றுக்கு நூறு எடுத்து பாஸ் பண்ணிட்ட என கட்டிக் கொள்கிறார். அதன் பிறகு மது கண்ணம்மாவை மெடிக்கல் ஷாப்பில் விட்டுவிட்டு பக்கத்து தெருவில் ஜாக்கெட் வாங்கி வருகிறேன் என சொல்ல இதற்கிடையில் மழை வந்துவிட அங்கு வரும் பாரதி பஸ் ஸ்டாப்பில் மழைக்கு ஒதுங்கி சிகரெட் பிடித்துக் கொண்டிருக்க அங்கு பொதுமக்கள் நிறைய பேர் கூடிவிட அங்கு வரும் கண்ணம்மா பப்ளிக் பிளேஸ்ல இப்படி சிகரெட் பிடிக்கிறீர்களே தப்புன்னு தோணலையா என பாரதியிடம் சண்டையிடுகிறார்.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட கண்ணம்மா பாரதியிடம் இருந்து சிகரெட்டை புடிங்கி போட திரும்பவும் பாரதி சிகரெட்டை எடுக்க அந்த பாக்ஸ் மொத்தத்தையும் பிடுங்கி வெளியே வீச பாரதி கண்ணம்மாவை அடிக்க கை ஓங்க அங்கிருந்த பெண்மணி ஒருவர் தப்பு நீ பண்ணிட்டு அந்த பொண்ணை அடிக்க வரியே பா என கேட்க பாரதி அவமானப்பட்டு அங்கிருந்து வெளியேறுகிறார்.

பிறகு மதுவிடம் கண்ணம்மா நடந்த விஷயத்தை சொல்லி பணக்காரனா இருந்தா என்ன வேணாலும் பண்ணலாமா என கோபப்பட்டு பேச மது பாரதியும் பணக்காரன் தான் ஆனா அவன் இப்படி கிடையாது என பாரதியை பாராட்டி பேசுகிறார்.

அதன் பிறகு பாரதி விஜய்யுடன் சரக்கு அடித்துக் கொண்டிருக்கும் போது அந்த பொண்ண சும்மா விடக்கூடாது என்னை அவ்வளவு பேர் முன்னாடி வெச்சி அசிங்கப்படுத்திட்டா என பேச விஜய் 24 மணி நேரத்தில் அவ யாருன்னு கண்டுபிடிச்சு நம்ம யாருன்னு அவளுக்கு காட்டலாம் என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.