மதுவை ஓங்கி அறைந்துள்ளார் வெண்பா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாரதி ரெஸ்ட் ரூம் சென்றதும் ஜெயிலர் மேடம் எப்படி இருக்க சித்ரா இவங்க ஸ்கூல்ல தான் வேலை பண்றியா என்ன கேட்க கண்ணம்மா ஆமாம் என சொல்ல ஜெயிலர் மேடம் சந்தோஷப்படுகிறார்.

கண்ணம்மா இருந்தாலும் எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது எப்போ மாட்டிக்க போறேன்னு பயமா இருக்கு என சொல்ல அதைப்பற்றி எல்லாம் இப்போதைக்கு யோசிக்காத உனக்குன்னு ஒரு குடும்பம் அமைந்திருக்கு சந்தோஷமா வாழற வழிய பாரு என கூறுகிறார். பிறகு பாரதி வெளியே வர இருவரும் பேச்சை மாற்றி ஸ்கூல் பற்றி பேசுகின்றனர்.

அடுத்து வாடன் ஜெயிலர் அம்மா வீட்டுக்கு வர கண்ணம்மா அவரைப் பார்த்து பயப்பட உடனே ஜெயிலர் அம்மா வெளியே எழுந்து சென்று அவரை வெளியே நிற்க வைத்து பேசி அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் வெண்பா வீட்டுக்கு வர ஷர்மிளா ஊர் எப்படி இருக்கு என்பது குறித்து விசாரித்து கொண்டிருக்க அப்போது செல்வம் அவருடைய மகள் மதுவும் வருகின்றனர்.

செல்வம் வெண்பாவை பார்த்து எப்படி இருக்கமா என கேட்க வெண்பா நல்லா இருக்கேன் செல்வம் என பெயர் சொல்லி பேசி அதிர்ச்சி கொடுக்கிறார். அடுத்து மது வெண்பா ஃபாரின் போய் ஆளே மாறிட்டடி என தோழி என்ற உரிமையில் தொட்டு தொட்டு பேச கடுப்பாகும் வெண்பா நீ இந்த வீட்டு வேலைக்காரி, யாரை தொட்டு பேசற என பளார் என்று அறைகிறார். இதனால் செல்வம் மற்றும் மது அதிர்ச்சியாக ஷர்மிளா சந்தோஷப்படுகிறார்.

மறுபக்கம் ஒருநாள் தங்கியிருந்துதான் ஸ்கூல் வேலையை முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட கண்ணம்மா என்னை பஸ்ஸில் ஏற்றி விடு, நான் ஊருக்கு போகிறேன் என பாரதியிடம் சொல்ல பிறகு பாரதி சௌந்தர்யாவுக்கு போன் போட சௌந்தர்யா சண்முக வாத்தியாரிடம் அனுமதி கேட்டு கண்ணம்மாவை ஒரு நாள் தங்கியிருந்து வேலையை முடித்துவிட்டு வர சொல்கிறார்.

அடுத்து கண்ணம்மா பாரதியுடன் காரில் வந்து கொண்டிருக்கும் போது தங்குவது என முடிவாகிடுச்சு ரூமுக்கு போறதுக்கு முன்னாடி பீச் போய்ட்டு போகலாம் என சொல்ல முதலில் மறுக்கும் பாரதி பிறகு கண்ணம்மாவை கூட்டிக்கொண்டு பீச்சுக்கு செல்கிறார்.

கடலைப் பார்த்ததும் கண்ணம்மா எவ்வளவு நாள் ஆசை என சொல்லி கண்ணீர் விட பாரதி என்ன ஆச்சு என கேட்க அதெல்லாம் ஒன்றும் இல்லை கடலை பார்த்ததும் வர பீல் என சொல்ல பாரதி என்னமோ இன்னைக்கு தான் முதல் முறை கடலை பார்க்கிற மாதிரி பேசுற என கேட்க கண்ணம்மா நீ சொல்றது உண்மைதான் என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார்.

பிறகு பாரதி மற்றும் கண்ணம்மா என இருவரும் கடல் தண்ணீரில் காலை வைத்து சந்தோஷமாக விளையாடுகின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.