குடியை விட பாரதி எடுத்த முடிவால் வெண்பா சூழ்ச்சி செய்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மது மற்றும் கண்ணம்மா என இருவரும் பாரதியின் அப்பா பேசிய ஆடியோ பைலை வாங்குவதற்காக எப்எம் ரேடியோ ஆபிஸ்க்கு வந்துள்ளனர்.

கார்த்திக் என்பவரை பார்க்க வேண்டும் என பொய் சொல்லி உள்ளே போக பிறகு அந்த ஆபீஸ் உயர் அதிகாரியை பார்த்து சௌந்தர்யா கம்பெனி ஸ்கூலில் இருந்து வருவதாக சொல்லி பாரதியின் அப்பா பேசிய ஆடியோ பைலை கேட்க அவர் அதெல்லாம் தர முடியாது என கோபப்பட்டு திட்டி வெளியே அனுப்புகிறார்.

மறுபக்கம் பாரதி சௌந்தர்யா கோபமாக இருப்பதால் என்ன செய்வது என நண்பன் தண்டபாணியிடம் ஐடியா கேட்க அவன் முருகனுக்கு மாலை போட்டு 48 நாட்கள் விரதம் இருக்க சொல்ல பாரதி அதிர்ச்சி அடைகிறார். இருந்த போதிலும் அம்மாவின் கோபத்தை குறைக்க பாரதி மாலை போட்டுக் கொள்ள முடிவெடுக்க இருவரும் கோவிலுக்கு செல்கின்றனர்.

மறுபக்கம் கண்ணம்மா எப்படியாவது பாரதியின் அப்பா பேசிய கேசட்டை வாங்கி விட வேண்டும் என எப்எம் ஆபீஸ் வெளியே காத்துக் கொண்டிருக்க அந்த அதிகாரி இவர்களை மீண்டும் மீண்டும் திட்டி வெளியே அனுப்புகிறார்.

சௌந்தர்யா வீட்டில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது அப்போது வெண்பா என்ன இன்னும் பாரதியை காணவில்லை என பார்த்தபடி இருக்க சௌந்தர்யா ஜூஸ் கேட்க வெண்பா ஜூஸ் போட்டு தர கிச்சனுக்கு வருகிறார்.

அப்போது வெண்பா பாரதிக்கு போன் போட தண்டபாணி போனை எடுத்து சௌந்தர்யா அம்மாவின் கோபத்தை குறைக்க மாலை போட போவதாக சொல்ல வெண்பா அதிர்ச்சி அடைகிறார். இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என திட்டம் போட்டு ஜூஸில் தூக்க மாத்திரையை கலந்து சௌந்தர்யாவுக்கு கொடுக்க அதைக் குடித்த சௌந்தர்யா கொஞ்ச நேரத்தில் மயங்கி கீழே விழுகிறார்.

இதனால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் பதற வெண்பா அஞ்சலியிடம் நீ உடனே பாரதிக்கு போன் போட்டு அவனை வர சொல்லு என சொல்ல அஞ்சலி பாரதிக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல பாரதி மாலை போடாமல் உடனடியாக அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.