கண்ணம்மா வீட்டுக்கு வர அந்த விஷயம் மருந்து பாரதி மதுவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா சீசன் 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் டாக்டர் கண்ணம்மாவின் அம்மா பாக்கியாவை பரிசோதனை செய்து அவர் இறுதி கட்டத்தில் இருக்கிறார். அவரை குணப்படுத்த கண்ணம்மா வந்தால் மட்டும் தான் முடியும் என சொல்கிறார்.

பிறகு கண்ணம்மாவின் அக்கா வெளியே வர அப்போது ஆட்டோவில் வந்து கண்ணம்மா இறங்க ஆட்டோ டிரைவர் சின்ன வயசில் ஓடிப்போன கண்ணம்மா வந்திருக்கா என்று சொன்னதும் ஆசையாக கட்டிப்பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்று தம்பிக்கு அறிமுகம் செய்ய சின்ன வயசுல ஓடிப் போனவ தானே இப்ப எதுக்கு வந்திருக்கா என ஏளனமாக பேசுகிறான்.

பிறகு அம்மாவிடம் அழைத்துச் செல்ல அவர் கண்ணம்மாவை கட்டிப்பிடித்து கண்ணீர் விடுகிறார். பிறகு கண்ணம்மாவின் அப்பா வர சித்ரா அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி நான்தான் கண்ணம்மா என சொல்ல நீதான் கண்ணம்மா என எப்படி நம்புவது என கேட்க உங்களுக்கு இப்படி சந்தேகம் வருவது தவறு கிடையாது என சொல்லி சிறுவயதில் ஊரை விட்டு ஓடும் போது அணிந்திருந்த துணிமணிகளை எடுத்துக்காட்ட சுப்பிரமணி வாத்தியாரும் நம்பிவிட்டார்.

அதன் பிறகு கண்ணம்மாவின் அக்கா மதுவுக்கு போன் போட்டு சின்ன வயசில் ஓடிப்போன கண்ணம்மா வந்திருப்பதாக சொல்ல அவர் சந்தோஷப்படுகிறார். பிறகு பாரதியிடம் இந்த விஷயத்தை சொல்ல இதைக்கேட்ட அஞ்சலியும் சந்தோஷப்பட பாரதி நம்ப பிரெண்ட் செல்வாவை கொன்னுட்டு ஓடிப்போனவ தானே அவளை பத்தி கேட்கவும் விரும்பல பார்க்கவும் விரும்பல என அதிர்ச்சி கொடுக்கிறார்.

பிறகு சௌந்தர்யா பாரதிக்கு பெண் பார்ப்பது பற்றி பேசிக் கொண்டிருக்க அப்போது ஷர்மிளா தன்னுடைய கணவரை அழைத்து பாரதிக்கு வெண்பாவை கட்டி வைப்பது பற்றியும் விஜய்க்கு அஞ்சலியை கட்டி வைப்பது பற்றியும் பேசுமாறு தூண்டிவிடுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீசன் 2 எபிசோட் முடிவடைகிறது.