பாரதியின் கல்யாணத்தை நிறுத்த நடந்த சதி ஒரு பக்கம் இருக்க ஒரு பக்கம் அவமானப்பட்டு உள்ளார் சித்ரா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜய் சௌந்தர்யாவிடம் ஆபீஸ் சம்பந்தமான டாக்குமெண்ட்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்க அங்கு வரும் ஷர்மிளா விஜயை தனியாக அழைத்துச் சென்று பாரதிக்கு பெண் பார்க்கும் விஷயத்தையும் சௌந்தர்யா தன்னை அசிங்கப்படுத்திய விசயத்தையும் சொல்கிறார்.

பாரதிக்கு உன்னுடைய தங்கச்சி வெண்பாவை கல்யாணம் பண்ணி வைக்கணும். உனக்கு இந்த வீட்டு பொண்ணு அஞ்சலியை கல்யாணம் பண்ணி வைக்கணும். அதன் மூலம் இந்த சொத்து மொத்தத்திற்கும் நான் எஜமானி ஆகிடுவேன். அதுவரைக்கும் இந்த பாரதிக்கு கல்யாணம் ஆகக்கூடாது என சொல்ல விஜய் யாருக்கும் ஒருவருக்கு போன் போட்டு திட்டம் ஒன்றை திட்டுகிறார்.

மறுபக்கம் சித்ரா தன்னுடைய அத்தை மாமா வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ளாததால் எங்கே செல்வது என தெரியாமல் பஸ்ஸுக்கு காத்துக் கொண்டிருக்க அப்போது வரும் பஸ்ஸில் ஏற அவளது அத்தை கிராம ஆட்களுடன் ஓடி வந்து பஸ்ஸை நிறுத்தி சித்ராவை வெளியே இறக்கி அழைத்துச் சென்று குழந்தைகிட்ட இருந்து திருடிய நகை எங்கே என நச்சரிக்கிறார்.

சித்ரா நான் நகை எதுவும் எடுக்கல சத்தியமா சொல்றேன் நம்புங்க என சொல்லியும் அவளது அத்தை நம்ப மறுத்து அவளது பேக்கில் இருக்கும் துணிகளை எடுத்து வெளியே வீசி பரிசோதனை செய்கிறார். அப்போது சித்ராவின் மாமா வந்து நகை கிடைத்து விட்டது என சொல்லி மனைவியை அழைத்துச் செல்ல சித்ரா கண்ணீருடன் நிற்கிறார்.

அடுத்து பாரதி கிளப்பில் உட்கார்ந்து பந்தயத்தை பார்த்துக் கொண்டிருக்க அங்கு வரும் ரவுடிகள் அவனிடம் தகராறு செய்ய பிறகு பாரதி அவர்களை அடித்து நொறுக்க இதை ஒருவன் வீடியோவாக எடுக்கிறான். பிறகு சித்ரா பஸ்டாண்டில் ஒரு பஸ்சில் ஏறி உட்கார ரவுடிகள் அவளை பின்தொடர கண்ணம்மா என்ற பெண் ஓடிவர சித்ரா அவளுக்கு கை கொடுத்து பஸ்ஸில் ஏற உதவி செய்கிறார்.

அதன் பிறகு இருவரும் ஒரே விஷயத்தில் அமர்ந்து பேச கண்ணம்மா சித்ராவிடம் யாருமே தெரியாத அன்னவாசல் எதுக்கு போறீங்க என கேட்க சித்ரா என்ன சொல்வது என தெரியாமல் யோசிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.