பாரதியிடம் சௌந்தர்யா கேள்வி கேட்க கண்ணம்மாவால் அவளது அம்மாவுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாரதி கண்ணம்மா தன்னுடைய அம்மாவிடம் உண்மையை சொல்லி விடுவாளோ என பயந்து கொண்டிருக்க கண்ணம்மா சௌந்தர்யாவிடம் எதையோ சொல்வதை பார்த்து பாரதி பயப்படுகிறார்.

பிறகு பாரதி அந்த இடத்திலிருந்து நைசாக நடுவர் சௌந்தர்யா பாரதி கூப்பிட்டு நேத்து அவ்வளவு விஷயம் நடந்திருக்கு என்னிடம் எதுவுமே சொல்லல என கேட்டு கண்ணம்மா ஊரை சுத்தி பார்த்து போய் வழி தெரியாமல் தவிக்க அவளை நீதான் வீட்டுக்கு கூட்டிட்டு போய் விட்டதாக சொன்னா என சொல்லி பாராட்டுகிறார்.

பிறகு பாரதி கண்ணம்மாவிடம் நன்றி சொல்ல நான் இன்னும் சௌந்தர்யா மேடம் கிட்ட நடந்த விஷயத்தை சொல்றதா இல்லையா நீ முடிவு பண்ணல அதுக்குள்ள தேங்க்ஸ் சொல்லாத என்னை சொல்லி ஷாக் கொடுக்கிறார். இதனால் கண்ணம்மா அங்கிருந்து நகர்ந்ததும் பாரதி சிகரெட் பிடித்து வெறுப்பேற்றுகிறார்.

அதன் பிறகு சௌந்தர்யா வர வைத்து பாரதியின் கல்யாணம் பற்றி ஜாதகம் பார்க்க அவருக்கு தோஷம் இருப்பதும் பரிகாரம் செய்தால் கல்யாணம் நடந்துவிடும் என சொல்ல சௌந்தர்யா சந்தோஷப்படுகிறார்.

மறுபக்கம் கண்ணம்மா வீட்டில் அம்மா தம்பி மற்றும் அக்காவுடன் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க அப்போது ரஜினி பாட்டு ஓட கண்ணம்மாவின் அம்மா ரஜினி பாட்டுக்கு டான்ஸ் ஆடும் விஷயத்தை சொல்லி அம்மாவை ஆட வைக்க முயற்சி செய்ய அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகிறார். பிறகு பரிசோதனை செய்ய வந்த டாக்டர் இனி நான் சிகிச்சை அளிக்க மாட்டேன் உங்க இஷ்டத்துக்கு நீங்க என்னனா பண்ணுங்க என திட்டி விட்டு கிளம்புகிறார். இதனால் சண்முக வாத்தியார் கண்ணம்மா மீது கடும் கோபப்பட்டு திட்டுகிறார். இதனால் கண்ணம்மா கண் கலங்கி அழுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.