
விஜயை அறைந்துள்ளார் சௌந்தர்யா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா சீசன் 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கண்ணம்மா மதுவுடன் வீட்டுக்கு வர சண்முக வாத்தியார் நீ எங்க போன அதுக்குள்ள பக்கத்துல இருக்கவங்க எல்லாரும் வாத்தியார் வீட்டு பொண்ணு திரும்பவும் ஓடிப்போய்ட்டானு பேச ஆரம்பிச்சிட்டாங்க, இனிமே இப்படி பண்ணாத என எச்சரிக்கிறார்.

மறுபக்கம் சௌந்தர்யா வீட்டில் அஞ்சலி வெளியே வர விஜய் அஞ்சலி கையைப் பிடித்து நெஞ்சில் ஏ என பச்சை குத்திய டேட்டூவை காட்டி கையை பிடித்து பேச அஞ்சலி கையை விட சொல்லி பேச அங்கு வரும் சௌந்தர்யா விஜயை கன்னத்தில் அறைந்து எச்சரிக்கிறார்.
அதன் பிறகு ஷர்மிளா முறை பொண்ணு தானே அவள் கைய புடிச்சா என்ன தப்பு என கேட்க யாரா இருந்தாலும் ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம கைய புடிச்சு பேசக்கூடாது என சொல்கிறார். பிறகு பொண்ணுங்க கிட்ட எப்படி நடந்துக்கணும்னு பாரதி கிட்ட கேட்டு தெரிஞ்சிக்க என சொல்ல இதை கேட்ட பாரதி குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார்.
மறுபக்கம் கண்ணம்மா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும் போது காட்டில் நடந்த விஷயத்தை நினைத்து பார்க்க மயங்கி கீழே விழப் போக அங்கு வரும் சாந்தி கூட்டிட்டு போய் உட்கார வைத்து சுத்தி போடுகிறார்.
பிறகு பாரதி விஜயை கூப்பிட்டு காட்டில் நடந்த விஷயத்தை சொல்லி அவனை கண்டுபிடிக்க ஒரு அடையாளத்தை கண்டுபிடித்து வைத்திருக்கிறேன் என சொல்லி நெஞ்சில் பார்த்த டாட்டு குறித்து சொல்ல விஜய் அதிர்ச்சி அடைகிறார்.

அதன் பிறகு சௌந்தர்யா ஸ்கூலுக்கு கிளம்ப பாரதி, கண்ணம்மா நடந்த விஷயத்தை அம்மாகிட்ட சொன்னா என்ன ஆகிறது? எல்லாரும் என் மூஞ்சில காரி துப்புவாங்க என மதுவிடம் சொல்லி புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோடு முடிவடைகிறது.