கண்ணம்மாவிடம் நல்லவன் வேஷம் போட்டு நடுக்காட்டில் தவிக்கவிட்டுள்ளார் பாரதி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணம்மா நடக்க முடியாமல் நடந்து வர அப்போது அந்த வழியாக வரும் பாரதி ஜீப்பை நிறுத்திவிட்டு கண்ணம்மாவிடம் நீ சொன்னதை யோசித்துப் பார்த்தேன். என்னால அஞ்சு மணி நேரம் சிகரெட் பிடிக்காமல் இருக்க முடியுது அப்படின்னா கண்டிப்பா என்னால் அந்த பழக்கத்தை விட முடியும் என்று புரிஞ்சுகிட்டேன்.

இதுவரை உன்கிட்ட நடந்துகிட்ட எல்லாத்துக்கும் சாரி, இனி நாம பழையபடி நல்ல நண்பர்களாக இருப்போம் என சொல்லி கண்ணம்மாவை நம்ப வைத்து நான் வீட்டில் விட்டு விடுகிறேன் என ஜிப்பில் ஏற்றி விடுகிறார். பிறகு ஊரை சுற்றி பார்க்கலாம் என கண்ணம்மாவை அழைத்துக் கொண்டு ஒரு காட்டுக்குச் செல்ல கண்ணம்மா அந்த காட்டின் அழகை ரசித்து நான் முன்னாடி வேகவேகமாக ஓடுகிறேன் நீ பின்னாடியே வா என சொல்லி ஓட ஒரு கட்டத்தில் பாரதி கண்ணம்மாவை விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

பாரதி கண்ணம்மாவுடன் செல்வதை பார்த்து பின் தொடர்ந்து சென்ற விஜய் பாரதி அங்கிருந்து கிளம்பியதும் ஒரு புள்ளிமான் தனியா காட்டுக்குள்ள சிக்கி இருக்கு வேட்டையாடிட வேண்டியது தான் என முகமூடி அணிந்து காட்டிக்குள் செல்கிறார்.

மறுபக்கம் சாந்தி இன்னும் கண்ணம்மா வரவில்லை என பயந்து கொண்டு இருக்க அப்போது சண்முக வாத்தியார் வர அவரிடம் கண்ணம்மா வரலையா என கேட்க அவ நடந்து வருவதாக சொன்னாலே இன்னும் வரலையா என கேட்கிறார். பிறகு சாந்தி மதுவுக்கு போன் போட்டு கண்ணம்மா பத்தி கேட்க கண்ணம்மா அங்கும் இல்லை என தெரிய வருகிறது.

இந்தப் பக்கம் காட்டுக்குள் போன விஜய் கண்ணம்மாவின் கற்பை சூறையாட அவளை பின்தொடர ஒரு கட்டத்தில் கண்ணம்மா ஓட தொடங்குகிறாள். விஜயும் கண்ணம்மாவை விடாமல் துரத்துகிறான். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது