Bharadha Naidu in Sembaruthi Serial

சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் தாலாட்டு ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் நடிகை ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Bharadha Naidu in Sembaruthi Serial : தமிழ் சின்னத்திரையும் சீரியல்களுக்கு பெயர்போன சேனல் சன் டிவி. இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா, வானத்தைப்போல போன்ற பல சீரியல்கள் டி ஆர் பி யின் முக்கிய இடத்தைப் பெற்று வருகின்றன.

தாலாட்டு சீரியலில் தெய்வமகள் சீரியலில் நடித்த கிருஷ்ணா நாயகனாக நடிக்க தென்றல் சீரியலில் நடித்த ஸ்ருதி ராஜ் நாயகியாக நடித்து வருகிறார். அம்மாவின் பாசத்திற்காக கிருஷ்ணா ஏங்குவதுபோல இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் நடித்த பரதா நாயுடு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். செம்பருத்தி சீரியலில் கொடுத்த ஆதரவை இந்த சீரியலுக்கும் கொடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.