Bhagyaraj resign reason

Bhagyaraj Resign Reason : சர்கார் கதை விவகாரத்தில் ஈடுபட்டு பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகினார் இயக்குனரும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவருமான கே பாக்யராஜ்.

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார்.

வருண் ராஜேந்திரன் என்ற உதவி இயக்குனர் சர்க்கார் படத்தின் கதை என்னுடையது என எழுத்தாளர் சங்கத் தலைவரான பாக்கியராஜிடம் முறையிட்டு இருந்தார்.

இதற்காக பாக்கியராஜ் குரல் கொடுத்து பிரச்சனையை சமரசமாக முடித்து வைத்தார். அதன் பின்னர் தன்னுடைய எழுத்தாளர் சங்க பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

ஆனால் பாக்யராஜின் ராஜினாமா கடிதத்தை ஏற்க முடியாது என எழுத்தாளர் சங்க பொதுச் செயலாளர், தொண்டர்கள் ஆகியோர் திட்டவட்டமாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று சென்னையில் நடந்த சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி சிறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய போது வருண் ராஜேந்திரனுக்கு பணம் வாங்கிக் கொடுப்பதற்காக குரல் கொடுக்கவில்லை.

அவருக்கு பெயர் வாங்கிக் கொடுக்கத் தான் குரல் கொடுத்தேன். இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் எனத் தெரிந்தும் குரல் கொடுத்தேன் என கூறியுள்ளார்.

மேலும் எழுத்தாளர் சங்கத்தில் இது போன்ற பிரச்சனைகள் மீண்டும் ஏற்படக் கூடாது என்பதற்காக தான் என்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன் எனவும் கூறியுள்ளார்.

இது போன்ற பிரச்சனைகளால் பல உதவி இயக்குனர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இனியும் இந்த நிலை தொடரக் கூடாது என்பதே என்னுடைய நோக்கம் எனவும் கூறியுள்ளார்.