பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவாக நடிக்கும் நடிகை சுசீத்ரா வெள்ளித் திரையில் பிரபுதேவாவிற்கு அம்மாவாக மாறி உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கன்னடத்தில் மாங்கல்யா என்ற தொடரின் மூலம் பிரபலமான சுசித்ரா நாணல் என்னும் தொடர் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு நடிக்க வந்தார். அதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா என்னும் கதாபாத்திரத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த சுசித்ரா தற்போது தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகி வரும் பிரபல நடிகர் மற்றும் நடன இயக்குனரான பிரபுதேவாவின் புதிய படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற இந்த தகவல் இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.