பீஸ்ட் பட டிரைலர் பற்றிய அறிவிப்பு இணையத்தில் வெளியாகியுள்ளது.

Beast Trailer Announcement : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு பாடல் வெளியான நிலையில் விரைவில் மூன்றாவது பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படத்தின் டீசர் மற்றும் டிரைலருக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த நிலையில் நெல்சன் திலீப் குமார் நேற்று நாளை என ஒரே வார்த்தையை ட்வீட் செய்திருந்தார்.

இதனால் இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டீஸர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது பீஸ்ட் டிரைலர் வரும் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.