பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே எப்போது நடக்கிறது என்பது குறித்து தகவல் தெரியவந்துள்ளது.

Beast Audio Launch Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீசாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இருந்து முதல் சிங்கிள் ட்ராக் ஆக வெளியான அரபிக் குத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது வரும் மார்ச் 20ஆம் தேதி டீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி நேரு ஸ்டேடியம் அல்லது சாய்ராம் கல்லூரியில் நடக்கும் என கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.