BCCI Update
BCCI Update

BCCI Update – ஆஸ்திரேலியாவில் 71 ஆண்டுகால காத்திருப்பு நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் முடிவிற்கு வந்து உள்ளது.

இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதனை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வீரர்களை ஊக்கம் அளிக்கும் வகையில் பிசிசிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

ஆஸ்.,- இந்தியா இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

மீண்டும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. தொடரை வெல்லும் அணியை தீர்மானிக்கும் இறுதி போட்டியான 4-வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெரும் வாய்ப்பு அதிகமாக இருந்தது.

ஆனால், போட்டி நடைபெற இருந்த நாட்களில் மழை பெய்யவே போட்டி சமனில் முடிந்தது.

இதனால் இந்தியா இதுவரை ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை என்ற அவபெயரை கோலி தலைமையிலான இந்திய அணி மாற்றி உள்ளது.

இதனால், பிசிசிஐ அணியின் வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் மற்றும் உதவி ஊழியர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் ஊக்க தொகை அளிப்பதாக அறிவித்து இருந்தது.

அதனை தொடர்ந்து பிசிசிஐ வெளியுட்டுயுள்ள செய்தி : ஊக்கத்தொகை ஒவ்வொரு வீரர்களுக்கும் போட்டியில் வாங்கும் சம்பளத்திற்கு சமமான அளவில் வழங்கப்படும்.

ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்த வீரர்களுக்கு ஒவ்வொரு போட்டியிலும் தலா 15 லட்சம் ரூபாயும், ஆடும் லெவனில் இடம் பெறாத வீரர்களுக்கு தலா 7.5 லட்சம் ரூபாயும் சம்பளமாக வழங்கபட்டு வருகிறது.

பயிற்சியாளர் ஒவ்வொருவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

பயிற்சியாளர்கள் அல்லாத உதவி பணியாளர்களுக்கு அவர்களின் சம்பளத்தின் அடிப்படையில் ஊக்க தொகை அளிக்கபடும்” என தெரிவித்து இருக்கிறது.