பாலகிருஷ்ணா நடித்த ‘அகண்டா-2’ ஓடிடி..யில் ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்..

Web Ads

தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘அகண்டா’. முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது பாகம் வெளியிடப்பட்டது. இப்படத்தை பாலைய்யா ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்நிலையில் இந்த படத்துடைய ஓடிடி தளத்தில் விரைவில் ரிலீசாகவுள்ளது.

போயபடி ஸ்ரீனு இயக்கிய இப்படம், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் நாளை 9-ந்தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவான பார்வையாளர்களை ‘அகண்டா 2’ பெரியளவில் கவரவில்லை. இதனால் பாக்ஸ் ஆபீஸில் குறைந்த அளவிலே இந்தப் படம் வசூலை குவித்தது.

இதனிடையில் ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் பாலகிருஷ்ணாவை நடிக்க வைப்பதற்காக நெல்சன் திலீப்குமார் முயற்சி செய்தார். அவர் நடித்தால் ஆந்திரா உள்ளிட்ட தெலுங்கு பக்கம் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிப்பதற்கு பாலகிருஷ்ணா மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

balakrishna act akhanda movie ott release
balakrishna act akhanda movie ott release