Balaji Mohan in Upcoming Movie

தனுஷை வைத்து இயக்கி இருந்த படம் தள்ளிப் போனதால் மாரி பட இயக்குனர் வேறொரு நடிகருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

Balaji Mohan in Upcoming Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது தனுஷ் 43 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடிக்க உள்ளார். தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் பாலாஜி மோகன் இயக்கத்தில் ஒரு படம் ராட்சசன் படம் இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் ஒரு படம் என பல படங்களை கையில் வைத்துள்ளார்.

தொடர்ந்து மாரி பட இயக்குனர் பாலாஜி மோகன் இயக்க இருந்த படம் தள்ளிப் போய் வருகிறது. இதன் காரணமாக பாலாஜி மோகன் அடுத்ததாக சித்தார்த்தை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஒரே தங்கப்பதக்கம்; ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மதிப்பு

பாலாஜி மோகனின் அறிமுகப் படமான காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர் சித்தார்த் தான். தற்போது அவருடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார் பாலாஜி மோகன். இந்த படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sambavam Short Film | Director & Written K.Aaron | AASH Studios | Densy | P. Mohamed Hussain | HD