Babar Masoodi
Babar Masoodi

Babar Masoodi – டெல்லி: அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று 26-வது ஆண்டு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ‘பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று, நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்துத்துவா அமைப்புகள், ஆளும் பாஜக அரசுக்கு கடும் நெருக்குதல் அளித்து வருகின்றன.

உச்சநீதிமன்றத்தில் சர்ச்சைக்குரிய இந்த நிலத்தைக் குறித்த மனுக்கள் மீதான விசாரணை வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதனால், அசம்பாவிதங்களை எதுவும் நடைபெறாமல் தடுக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்ட வேண்டுமென வலியுறுத்தி, இந்து அமைப்புகள் இன்று வெற்றித் தினமாக கொண்டாடவுள்ளன. இதன் ஒரு பகுதியாக இன்று யாகங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்து அமைப்புகளின் நிகழ்ச்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பு நிகழ்ச்சிகளை முன்னிட்டு அயோத்தி மற்றும் பைசாபாத் நகரங்களில் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் “பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது”!..

மேலும், ‘சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், புறநகர் ரயில் நிலையங்கள் மக்கள் கூடும் இடங்களில் போலீஸார் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர்’ ..