பாரீன் கேர்ள் ரேஞ்சுக்கு பேசி ராதிகாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் பாக்கியா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபியை பிரிந்து தனியாக வாழும் பாக்கியா வாழ்க்கையில் ஜெயிப்பதற்காக தொடர்ந்து பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்.

ராதிகாவின் சூழ்ச்சிகளை தவிடு பொடியாக்கி கேண்டீன் ஆர்டரையும் எடுத்துள்ளார். இப்படியான நிலையில் கேண்டீன் துவக்க விழாவுக்கு வரும் ஈஸ்வரியை ராதிகா வரவேற்க நான் ஒன்னும் உன்னை பார்க்க வரல என் மருமகளோட கேன்டின் திறப்பு விழாவிற்கு வந்திருக்கிறேன் என ஷாக் கொடுக்கிறார்.

அதன் பிறகு பாக்கியா ராதிகாவுக்கு ரோஸ் கொடுத்து பாரீன் கேர்ள் ரேஞ்சுக்கு இங்கிலீஷில் பேசி ஷாக் கொடுக்கிறார். இதனால் வரும் நாட்களில் ராதிகா வெர்சஸ் பாக்யா காட்சிகள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.