கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி உள்ளார் ஈஸ்வரி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா கோபியின் வீட்டுக்கு வந்து தங்கி உள்ள நிலையில் தொடர்ந்து எல்லோரிடமும் பிரச்சனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் வரும் நாட்களில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் காபி குடித்துக் கொண்டிருக்கும் ராதிகாவின் காபி கப்பை தட்டிவிடும் ஈஸ்வரி உனக்கு காபி ஒரு கேடா? இந்த வீட்டில எப்படி இருக்குன்னு நானும் பார்க்கிறேன் என ராதிகாவின் முடியை பிடித்து தர தர இழுத்து வந்து வெளியே தள்ளுகிறார்.

பிறகு கோபி வர ராதிகா அவரை கட்டிப்பிடித்துக் கொண்டு என்ன வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டாங்க என அதை ராதிகாவுடன் கோபி வீட்டுக்குள் செல்ல இந்த வீட்டில ஒண்ணு அவ இருக்கணும் இல்ல நான் இருக்கணும் என அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதன் பிறகு ராதிகாவின் அம்மா போலீசுடன் வீட்டுக்கு வர அவதான் உங்கள விவாகரத்து பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணிக்கிட்டா இல்ல அவங்க இந்த வீட்ல தான் இருப்பாங்க அதை தடுக்கிற உரிமை யாருக்கும் கிடையாது என சொல்ல ராதிகா வன்மத்தோடு மீண்டும் வீட்டுக்குள் நுழைகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.