பாக்கியா பணத்தை தூக்கி வீச அவமானத்தில் ராதிகா அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி 18 லட்சம் ரூபாய் கேட்டு கெடு கொடுத்துள்ள நிலையில் ஒரு மாதம் முடிய இன்னும் இரண்டு நாட்கள் தான் உள்ளது.

பாக்கியா இன்னும் 10 லட்சம் ரூபாய் பணம் தேவை என்ற நிலையில் இருக்கிறார். இப்படியான நிலையில் தற்போது அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் கோபி கொடுத்த டைம் முடிஞ்சு போச்சு பணம் எங்க என்ன டைம் கேட்டு கெஞ்ச போறியா என்று கேட்க பாக்கியா பணத்தை எடுக்க உள்ளே போக வழி இந்த பக்கம் இருக்கு என நக்கல் அடிக்கிறார்.

உள்ளே போன பாக்கிய 18 ரூபாய் பணத்தை எடுத்து வந்து கோபியிடம் கொடுத்து எனக்கு சுய கௌரவம் தான் முக்கியம், பணத்தை வாங்கிட்டு ஒழுங்கு மரியாதையா வெளியே போய்க்கிட்டே இருங்க என்று சொல்ல கோபி அதெல்லாம் போக முடியாது என்று அடம்பிடிக்க ராதிகா இதுக்கு மேல என் இருக்கிறது நல்லா இருக்காது என சொல்லி கோபி அழைத்துக் கொண்டு வெளியே கிளம்புகிறார்.

இருவரையும் வெளிய அனுப்பிய பாக்யா கதவை இழுத்து மூடுடா என்று சொல்ல தெருவில் நிற்கும் கோபி அதிர்ச்சி அடைகிறார்.