மாலினி உடன் செழியன் சிக்க பாக்யா பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா சோகமாக உட்கார்ந்து இருக்க வெளியே சென்று வந்த எழில் சாப்பிட வைக்கிறார்.
மறுபக்கம் கணேசின் அப்பா அம்மா அடுத்து என்ன செய்வது என தெரியாமல் குழப்பம் அடைகின்றனர். கடைசியாக எழிலிடம் உண்மையை சொல்லி விடலாம் என முடிவெடுக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து செழியன் மாலினி வீட்டில் இருக்க பாக்யா போன் செய்து எங்க இருக்க என்ன ஏது என்று விசாரித்துக் கொண்டிருக்கும் போது மாலினி குறுக்கே பேசிவிட பாக்யாவிற்கு சந்தேகம் அதிகமாகி செழியனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார்.
இன்னும் 20 நிமிஷத்தில் நீ வீட்டில் இருக்கணும் என சொல்லி ஃபோனை வைக்க செழியன் வீட்டுக்கு ஓடி வர பாக்கியா எங்க போயிட்டு வர ஏன் இவ்வளவு நேரம் எனக்கு கேள்வி கேட்க இரண்டு வீட்டுக்கு போயிட்டு வந்ததாக சொல்கிறார். உங்கப்பா மாதிரி ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் உங்கிட்ட இப்படி பேசிக்கிட்டு இருக்கேன் உன்னை நம்பி ஒரு பொண்ணு வந்து இருக்கா உனக்கு ஒரு குழந்தையும் பிறக்கப் போகுது என அறிவுரை வழங்குகிறார்.
அதைத்தொடர்ந்து பாக்யா மற்றும் செல்வி இருவரும் வாக்கிங் செல்ல அப்போது எதிரில் வரும் கோபி கேண்டீன் பறி போன விஷயத்தை சொல்லி வெறுப்பேற்றுகிறார். எல்லா நாளும் இப்படியே இருக்காது இது வந்து எனக்கு திறமை இல்லாமல் பறி போனது கிடையாது, என்ன விரோதியா பாக்குறவங்க சதியால் நடந்த விஷயம் என பதிலடி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.