
பாக்கியா கேன்டினை காலி செய்ய வார்த்தையால் நோகடித்துள்ளார் ஈஸ்வரி.
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கணேஷ் அமுதாவை தேடி சென்னைக்கு கிளம்புவதாக சொல்ல அவரது அம்மாவும் அப்பாவும் அதிர்ச்சி அடைகின்றனர். கணேஷை தடுக்க முயற்சி செய்தும் முடியாமல் போகிறது.

அடுத்ததாக பாக்யா கேண்டினை விட்டு காலி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட எல்லோரும் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க வேலை செய்பவர்கள் பாக்கியாவிடம் பணம் கேட்கலாமா என்று பேசிக் கொண்டிருக்க செல்வி அவர்களை பிடித்து திட்டுகிறார்.
அதைத் தொடர்ந்து பாக்கியா வருத்தத்தோடு கேன்டினை காலி பண்ணிக் கொண்டு வெளியே வர அதை பார்த்து சந்தோஷப்படுகிறார் ராதிகா. அடுத்ததாக பாக்கியா வீட்டுக்கு வந்து அதே யோசனையில் இருக்க வேலை செய்தவர்கள் இருவர் வீட்டுக்கு வந்து பணம் கேட்டு நச்சரிக்கின்றனர்.
இதனால் ஈஸ்வரி பாக்யாவை பிடித்து திட்டுகிறார் உனக்கு இதெல்லாம் தேவைதான் நீ ரொம்ப ஆடிட்ட டிவைஸ் ஆன பிறகு இருக்கிற மாதிரியா இருந்த என வார்த்தையால் பாக்கியாவை நோகடிக்கிறார்.

இங்கே கோபி ராதிகாவுக்காக ஆவலோடு காத்திருக்க என்னாச்சு என்று கேட்க கேண்டீன் காலி பண்ணிட்டாங்க என்று சொன்னதும் கோபி சந்தோஷப்படுகிறார் நீ நான் மூணு பேரும் வெளியே போய் சந்தோஷமா சாப்பிட்டு வரலாம் என கிளம்புகிறார். கே பாக்யா கேண்டினில் நடந்த விஷயம் ஈஸ்வரி சொன்ன வார்த்தை என எல்லாத்தையும் நினைத்து பார்த்து வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.