
ஈஸ்வரி சொன்ன வார்த்தையால் பாக்கியா செக்மேட் வைத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ஹாஸ்பிடல் இருந்து வீட்டுக்கு வந்து விட அந்த விஷயம் மருந்து ஈஸ்வரி இனியா மற்றும் செழியன் என மூவரும் கோபியை பார்க்க ராதிகா வீட்டிற்கு வருகின்றனர்.

ஈஸ்வரி கோபிக்கு ஹார்ட் அட்டாக் என இன்னைக்கு அழுது புலம்ப ராதிகா அது ஹார்ட் அட்டாக் இல்ல பேனிக் அட்டாக் என சொல்கிறார். மேலும் நீ நம்ம வீட்ல இருக்கிற வரைக்கும் உனக்கு இதெல்லாம் வந்துச்சா நல்லா தானே இருந்த, எல்லாம் இந்த வீட்டுக்கு வந்த பிறகு தான். இனிமே நீ இங்க இருக்க வேண்டாம் நம்ம வீட்டுக்கு வந்துடு என்று சொன்ன ராதிகா உட்பட எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
ராதிகாவின் அம்மாவுக்கும் ஈஸ்வரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட செழியன் ஈஸ்வரியை வாங்க கிளம்பலாம் என்று சொல்லி வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். வீட்டுக்கு வந்ததும் ஈஸ்வரி கோபியின் நிலைமையை பற்றி சொல்லி அவனை வீட்டுக்கு கூட்டி வரப் போறேன் என்று சொன்னது எல்லோரும் அது எப்படி முடியும் என அதிர்ச்சியுடன் கேட்கின்றனர்.
ஆனால் ஈஸ்வரி தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்க எழில் இங்கு செய்கிறது எதுவும் சரியில்ல அவர் இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்ல ஈஸ்வரி நீ பேசாத நான் அவனை கண்டிப்பாக கூட்டிட்டு வருவேன் என சொல்ல பாக்கியா நீங்க கூட்டிட்டு வாங்க உங்க பையன உங்க பக்கத்திலேயே வச்சு பார்த்துக்குங்க ஆனா அவர் இந்த வீட்டில் கால் எடுத்து வைக்கிற அடுத்த நிமிஷம் நான் வெளியே போயிடுவேன் என செக்மேட் வைக்கிறார்.

எழில் உட்பட நீ எதுக்குமா வெளிய போகணும் என்று சொல்ல அப்பவும் ஈஸ்வரி மனசு வச்சா எல்லாம் முடியும் கோபியை இங்க கூட்டிட்டு வர தான் போறேன் என்று சொல்லி உள்ளே ராமமூர்த்தி அதெல்லாம் நடக்காது நீ பயப்படாத என்று ஆறுதல் கூறுகிறார்.
இங்கே ராதிகாவின் அம்மா கோபியை கேள்வி மேல் கேள்வி கேட்டு டார்ச்சர் செய்ய கோபி எங்கம்மா பேசுனது தப்பு தான் அவங்க கூப்பிட்டால் அப்படியே கிளம்பி போயிடுவேன் நான் கொஞ்சம் அமைதியா இருங்க என மன்னிப்பு கேட்க ராதிகா நீ வெளியே வாமா என்று அம்மாவை கூட்டிச்செல்ல இப்படியே இருந்தா அவர் கிளம்பி போயிட்டே இருப்பாரு உன் வாழ்க்கை அம்போன்னு தான் போகும் உஷாரா இரு என ராதிகாவை எச்சரிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.