
பிரசவ வலியில் ஜெனி கஷ்டப்பட செழியன் கதறி துடிக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ஜெனிக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்க அங்கு வரும் செழியன் வலியில் இருக்கும் ஜெனியை பார்த்து கண்கலங்கி துடிக்கிறார். ஜெனிக்கு ஆறுதல் சொல்லு என பக்கத்தில் உட்கார வைக்க ஜெனி அழுவதை பார்த்து செழியன் அதைவிட அதிகமாக அழ பாக்யா நீ வெளில வா என வெளியே கூட்டி வந்துவிடுகிறார்.

மறுபக்கம் இனியா ஹாஸ்பிடல் போகலாம் என்று சொல்லிக் கொண்டிருக்க தாத்தா குழந்தை பிறக்கட்டும் போகலாம் என கூறுகிறார். இந்த நேரம் பார்த்து கோபி போன் செய்ய விஷயத்தை சொல்லும் இனியா ஹாஸ்பிடல் போகலாம் வாங்க என்று சொல்லி கோபியை கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடல் வருகிறார்.

ஹாஸ்பிடலில் செழியன் அழுவதை பார்த்து கோபியும் கண்கலங்க ஈஸ்வரி கோபியை பிடித்து திட்ட செழியன் எல்லாம் உங்களால தான் குழந்தை பெற்று குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி அவளை இந்த நிலைமைக்கு ஆக்கிட்டீங்க என ஈஸ்வரியை திட்டுகிறார். இதற்கிடையில் மாலினி செழியனுக்கு தொடர்ந்து போன் செய்து கொண்டே இருக்க செழியன் பிஸியா இருக்கேன் என்று சொல்லி ஃபோனை வைத்து விடுகிறார்.
அடுத்ததாக ஜெனிக்கு குழந்தை பிறக்க கோபி ஹாஸ்பிடலில் இருக்கும் எல்லோருக்கும் ஸ்வீட் வாங்கி கொடுத்து கொண்டாடுகிறார். ராதிகா போன் செய்ய ராதிகாவிடம் செழியனுக்கு குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை சொல்லி ரெண்டு நாளைக்கு ஆஸ்பிட்டலை விட்டு ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டேன் இங்க தான் இருப்பேன் என அதிர்ச்சி கொடுக்கிறார்.

ராதிகாவின் அம்மா நீ போய் குழந்தையை பார்த்துட்டு கையோட மாப்பிள்ளை கூட்டிட்டு வந்துடு இல்லன்னா அவங்க அப்படியே இழுத்து வச்சுப்பாங்க என ராதிகாவை அனுப்பி வைக்கிறார். இங்கே ஹாஸ்பிடல் எல்லோரும் சந்தோஷமாக இருக்க கோபி எல்லோருக்கும் சாப்பாடு வாங்க வெளியே வருகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.