ஆசை ஆசையாக இனியா கேரளா ட்ரிப் கிளம்ப கோபிக்கு ஆப்பு உருவாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஜெனி பேக்குடன் கீழே வந்து தன்னுடைய அம்மாவிடம் சென்று கண்ணீருடன் இங்கேயே இருந்துடவா என்று கேட்க எல்லோரும் கண் கலங்குகின்றனர்.

ஈஸ்வரி முறைனு ஒன்னு இருக்குல்ல முதல் பிரசவம் அம்மா வீட்டுல தான் நடக்கணும் அதனால நீ போயிட்டு நல்லபடியா குழந்தை பெத்துக்கிட்டு இங்க வந்துடு என்று சொல்ல எல்லோரும் ஜெனிக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்கின்றனர். அடுத்ததாக செழியன் ஜெனி நினைப்பாகவே இருக்க எழில் போன் பண்ணி பேசு என்று சொல்ல அவளே பண்ணட்டும் என்று இருக்கிறார்.

அதன் பிறகு மாலினி செழியனுக்கு போன் செய்து நானும் தனியா தான் இருக்கேன் நீங்களும் தனியாத்தான் இருக்கீங்க வீட்டுக்கு வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பேசிட்டு இருக்கலாம். உங்களுக்கும் சேர்த்து சாப்பாடு ஆர்டர் பண்றேன் என்று சொல்ல செழியன் கிளம்பி செல்கிறார்.

இங்கே ஜெனி பாக்கியாவுக்கு வீடியோ கால் செய்து வீட்டில் உள்ளவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். வெளியே கிளம்பிய செழியன் ஒருமுறை ஜெனிடம் பேசிட்டு போயிடலாம் என்று தொடர்ந்து போன் அடிக்க ஜெனி ஃபோனை எடுக்காமல் இவர்களுடன் பேசிக் கொண்டே இருக்கிறார்.

அடுத்து போனை வைத்துவிட்டு செழியனுக்கு போன் போட அதற்குள் அவரது அம்மா முதல்ல வந்து சாப்பிடு அதுக்கு அப்புறமா போன் பேசிக்கலாம் என்று கூட்டி சென்று விட திரும்பவும் செழியன் போன் செய்ய எடுக்க முடியாமல் போகிறது. அதைத் தொடர்ந்து இனியா ஒரு பக்கம் கேரளா கிளம்ப எல்லாவற்றையும் எடுத்து வைத்து தயாராக இருக்கிறார்.

மறுபக்கம் கோபி மற்றும் ராதிகா இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது ராதிகாவின் அம்மா வேகமாக ஓடிவந்து ஒரு நல்ல விஷயம் என்று சொல்லி மயூ பெரிய மனுஷியாகி விட்டதாக சொல்கிறார்.

எல்லாரும் பங்ஷன் குறித்து பேசிக்கொண்டிருக்க நாளைக்கு நீங்க எங்கேயும் போகக்கூடாது இங்க தான் இருக்கணும் என்று ராதிகா சொல்ல கோபியும் நான் எங்கேயும் போகமாட்டேன் இங்கதான் இருப்பேன் என்று சொல்ல வந்து இனியாவுடன் கேரளா செல்ல இருப்பது ஞாபகம் வருகிறது. இனியாவுடன் வெளிய போக வேண்டிய வேலை இருக்கு என்று சொல்ல ராதிகா அப்போ நீங்க இல்லாம மயூவுக்கு பங்க்ஷன் நடத்தனுமா என்று கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.