ராதிகாவிடம் வசமாக சிக்கி உள்ளார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இத சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியின் ஆபீசுக்கு வருகிறார். ஆபீஸ் வெளியே நின்று கோபிக்கு போன் பண்ண ரெஸ்டாரண்டில் இருக்கும் கோபி ஆபீஸில் தான் இருக்கிறேன் என்று பொய் சொல்வது மட்டுமல்லாமல் மேனேஜரிடம் பைலை கொண்டு வாங்க என்று பேசுவது போலவும் டிராமா போடுகிறார்.

இதனால் ராதிகா நான் உங்க ஆபிஸ் வெளியே தான் இருக்கேன் நீங்க இன்னும் 5 நிமிஷத்துல இங்க இருக்கணும் என்று போனை வைக்க அதிர்ச்சி அடையும் கோபி அங்கிருந்து பதறி அடித்து கிளம்புகிறார்.

இதனைத் தொடர்ந்து பாக்கியா எழில் ராமமூர்த்தி அமிர்தா மற்றும் செல்வியை கூட்டிக்கொண்டு ரெஸ்டாரண்ட் வந்து எல்லா இடத்தையும் சுற்றி காட்ட ராமமூர்த்தி ரொம்ப நல்லா இருக்கு என்று கூறுகிறார். பிறகு யாராவது ஒரு பெரிய ஆள வச்சி திறக்கலாம் என்று செல்வி சொல்ல எழில் நடிகர் நடிகைகளை வச்சு திறந்தா அவங்க பெரிய அமௌன்ட் கேப்பாங்க என்று சொல்கிறார். இப்போதைக்கு நம்மளால அப்படி செய்ய முடியாது என சொல்ல அமிர்தா நாம ஏன் மினிஸ்டர் கிட்ட கேட்க கூடாது என்று ஐடியா கொடுக்கிறார்.

ராமமூர்த்தி இது நல்லா ஐடியா என்று சொல்ல எழிலும் ஆமா மினிஸ்டர் மேடம் திறந்து வச்சா நல்ல விளம்பரம் கிடைக்கும் என சொல்கிறார். பிறகு இவர்கள் மினிஸ்டரை சந்திக்க கிளம்பி செல்கின்றனர். மறுபக்கம் கோபி வந்து ராதிகாவிடம் வா வீட்டுக்கு போலாம் ஆபீஸ் க்ளோஸ் பண்ணியாச்சு சாவி மேனேஜர் எடுத்துட்டு போய்ட்டாரு என்று சமாளிக்க எனக்கு எல்லா விஷயமும் தெரியும் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

நான் எத்தனை முறை உங்க ஆபீஸ் பத்தி கேட்டு இருக்கேன் என்று கேட்க கோபி மன்னிப்பு கேட்டு சொல்ல முயற்சி செய்ய ராதிகா பேசாதீங்க உங்க மேல கொலவெறியில் இருக்கேன் என்று ரோட்டில் நின்று கோபப்பட கோபி எதுவாக இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம் தயவு செய்து வா என்று கூட்டிச் செல்கிறார்.

ஒரு இடத்தில் நின்று ராதிகாவிடம் நானும் எவ்வளவோ முயற்சி பண்ண ஆனால் ஆஃபீஸ ரன் பண்ண முடியல அதனால தான் க்ளோஸ் பண்ணிட்டேன் என்று சொல்ல சரி அடுத்து என்ன பண்ண போறீங்க என்று ராதிகா கேட்க வெளியில வேலைக்கு போகலாம்னு இருக்கேன் என்று கோபி சொன்னதும் யாராச்சும் உங்களுக்கு வேலை கொடுப்பாங்களா என்று கோபப்படுகிறார். எவ்வளவு பொய் சொல்லி ஏமாத்தி இருக்கீங்க என்று ஆவேசப்படுகிறார். ஒழுங்கா காரை எடுங்க இல்லன்னா இறங்கி போகவா என்று கோபப்பட கோபி காரை எடுத்து வீட்டுக்கு கிளம்புகிறார்.

அதனைத் தொடர்ந்து இங்கே அமைச்சரை சந்தித்து ரெஸ்டாரன்ட் தரப் போகும் விஷயத்தை சொல்லி அவரை திறப்பு விழாவிற்கு கூப்பிட அமைச்சர் அன்னைக்கு 11 மணிக்கு முதலமைச்சரோட மீட்டிங் இருக்கு நீங்க எப்ப கடை ஓபனிங் வச்சிருக்கீங்க என்று கேட்க இவர்கள் 9:30 மணிக்கு என்று சொல்கின்றனர். நாங்க வேற டேட் இல்லனா வேற டைம் கூட மாற்றி வைத்துக்கொள்கிறோம் என்று பாக்யா சொல்ல அதெல்லாம் வேண்டாம் நீங்க சொன்ன நேரத்துக்கு நான் வந்துடுறேன் ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார் அமைச்சர்.

பிறகு கோபியும் ராதிகாவும் வீட்டுக்கு வர ராதிகா கோபியிடம் சத்தம் போட்டுக் கொண்டே வர ஈஸ்வரி கோபி என்னப்பா பிரச்சனை என்று கேட்க ஒன்னும் இல்லம்மா சின்ன பிரச்சனை தான் நாங்க பார்த்துக்கிறோம் என்று சொல்ல ராதிகா சின்ன பிரச்சனையா இது உங்களுக்கு சின்ன பிரச்சனையா என்று கோபப்படுகிறார். ராமமூர்த்தி என்னம்மா பிரச்சனை என்று கேட்க கோபி சொல்லாத என ராதிகாவிடம் கெஞ்சுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.