பாக்யா ரெஸ்டாரன்ட் திறக்க நாள் குறிக்க ராதிகாவிடம் சிக்கி உள்ளார் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்யா கிச்சனில் இருக்கும் போது செல்வியிடம் சேர்ந்து வாழும் போது தான் என்ன பிடிக்காது எதுக்கெடுத்தாலும் கேள்வி கேட்டுகிட்டே இருப்பாரு, இப்போ விவாகரத்து வாங்கி தனித்தனியா பிரிஞ்சாச்சு. இப்போ எதுக்கு என்ன கேள்வி கேட்கணும் இனிமே அவர் ஏதாச்சு கேட்டா நான் சும்மா இருக்க போறது இல்ல ஏதாவது பண்ணி விட போகிறேன் என்று கோபி மேல் இருக்கும் கோபத்தை செல்வியிடம் காட்டுகிறார்.
அதன் பிறகு செல்வி உனக்கு பிடிச்சிருந்தா பழனிச்சாமியை கல்யாணம் பண்ணிக்க அக்கா என்று சொல்ல பாக்யா அவர் நல்ல பிரண்டாவே இருக்கட்டும் என சொல்கிறார்.
அடுத்து செழியன் மொட்டை மாடியில் இருக்க அங்கு வரும் எழில் செழியனுக்கு நன்றி சொல்ல இதுக்கெல்லாம் எதுக்குடா நன்றி என்று பேசிக்கொண்டு இருக்க கோபியும் அங்கு வர எல்லா பிரச்சனைக்கும் பாக்கியா தான் காரணம் என்று சொல்ல இருவரும் கோபியை திட்டிவிட்டு கீழே வந்து விடுகின்றனர்.
பிறகு கோபி ராதிகாவிடம் வந்து விஷயத்தை சொல்லி என் புள்ளைங்க என்னை மதிக்கவே மாட்டறாங்க அம்மா பக்கம்தான் சாயறாங்க என்று சொல்லி வருத்தப்பட உங்களுக்காக நான் இருக்கேன் என்று ராதிகா ஆறுதல் சொல்ல இதுதான் சரியான சந்தர்ப்பம் என ஆபிஸை க்ளோஸ் பண்ண விஷயத்தை சொல்லிடலாம் என்று முடிவெடுத்து சொல்ல வர அந்த நேரம் பார்த்து ராதிகாவுக்கு ஒரு மெசேஜ் வருகிறது.
பிறகு ராதிகா என் சொந்தக்கார பையன் ஒருத்தன் வேலை கேட்டான் உங்களுக்கு தெரிஞ்ச ஆஃபீஸ் ஏதாவது இருந்தா ரெபர் பண்ணுங்க என்று கூறுகிறார். இதனால் கோபி உண்மையை சொல்ல முடியாமல் நிறுத்தி விடுகிறார்.
அதைத்தொடர்ந்து மறுநாள் பாக்யா ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்க போகும் விஷயத்தை எல்லாரிடமும் சொல்லி ராமமூர்த்தியிடம் நாள் குறிக்க சொல்கிறார். இதைக் கேட்டு அப்செட் ஆன கோபி மேலே வந்து ராதிகாவிடம் விஷயத்தை சொல்லி பேசாம நான் கூட ஒரு கேட்டரிங் பிசினஸ் பண்ணியிருக்கலாம் போல என்று சொல்ல உங்க பிசினஸ்ல என்ன பிரச்சனை சொல்லுங்க நான் உதவி பண்றேன் இன்னைக்கு நான் ஈவினிங் உங்க ஆபீஸ்க்கு வரேன் என்று அதிர்ச்சி கொடுக்க கோபி அதெல்லாம் வேண்டாம் ஒரு மாசத்துல எல்லா பிரச்சனையும் நானே சால்வ் பண்ணி விடுவேன் என்று சமாளிக்கிறார். கோபி ஆபீஸ் விஷயத்தில் பதட்டம் ஆவதை பார்த்து ராதிகாவுக்கு சந்தேகம் வருகிறது. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.