ஈஸ்வரி ராதிகா பக்கம் சாய தப்பிக்க முயற்சித்த அமிர்தாவுக்கு ஷாக் கொடுத்துள்ளார் கணேஷ்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எழில் மற்றும் செழியன் இருவரும் சேர்ந்து ஒரு பக்கம் அமிர்தாவை தேடுகின்றனர்.
இன்னொரு பக்கம் கணேஷ் குழந்தையை என்கிட்ட கொடு என்று சொல்லி அமிர்தாவிடம் வாக்குவாதம் செய்கிறார். நிலா அப்பான்னு சொல்லுடா என்று சொல்ல எழில் அப்பா கிட்ட போகணும் என்று நிலா சொல்ல கணேஷ் கடுப்பாகிறார். அப்பான்னு சொல்லு என்று குழந்தையை மிரட்ட நிலாவை கட்டிப்பிடித்துக் கொள்கிறாள்.
பாக்யா வாசலில் நின்று எழில் செழியனுக்காக காத்திருக்க ஈஸ்வரி ராதிகாவிடம் கோபி ஏதாச்சு போன் பண்ணானா என்று கேட்க இல்லை என்று சொன்னதும் பாக்யாவை கூப்பிட்டு எழில் , செழியன் போன் பண்ணாங்களா என்று கேட்க இல்லை என்று கூறுகிறார். உன்னால வீட்டு ஆம்பளைங்க எல்லாரும் தெரு தெருவா அலைஞ்சிட்டு இருக்காங்க என்று கோபப்படுகிறார்.
அதன் பிறகு ஈஸ்வரி உள்ளே போனதும் ராதிகா உங்களால 50 பேர் இல்லை 500 பேருக்கு கூட அசால்டா சமைக்க முடியும் அதுல எந்த பிரச்சனை வந்தாலும் உங்களால சமாளிக்க முடியும் ஆனால் அதே மாதிரி எல்லாத்தையும் உங்களால சமாளிக்க முடியும் என்று நினைக்கிறது தப்பு என்று கூறுகிறார். இதைக் கேட்டு உள்ளே இருந்து வெளியே வரும் ஈஸ்வரி நான் மனசுல நினைச்சத நீ அப்படியே சொல்லிட்ட 50 பேருக்கு சமைச்சுட்டா உன்னால எல்லாம் செய்ய முடியும் என்று கிடையாது. ஆனா நீ உலக மகா அறிவாளி மாதிரி நடந்துக்கிற என்று பாக்கியாவை திட்டுகிறார்.
இவளும் தான் இருக்கா நிறைய படிச்சிருக்கா ஒரு பெரிய கம்பெனியை நடத்துறா ஆனா எவ்வளவு அமைதியா இருக்கா என்று ராதிகா பக்கம் சாய்கிறார். மறுபக்கம் எழில் செழியன் பழனிச்சாமியை சந்தித்து உதவி கேட்க அவர் விடியற்க்குள்ள கண்டிப்பா கண்டுபிடித்துவிடலாம் என்று சொல்கிறார்.
அடுத்து செல்வி வீட்டுக்கு கிளம்பும்போது மளிகை கடைக்காரரிடம் இருந்து போன் வர அவர் பொருளை கொடுத்தது போக மீதி கொடுக்க வேண்டிய பணத்தை பற்றி சொல்ல அதிலிருந்து பாக்கியாவுக்கு காரின் நம்பர் நினைவுக்கு வந்து செழியன் மெசேஜ் அனுப்புகிறார். உடனே செழியன் பழனிச்சாமிக்கு நம்பர் அனுப்பி ட்ரேஸ் பண்ணி கண்டுபிடிக்க சொல்கிறார்.
இங்கே கணேஷ் அமிர்தாவிடம் விடிஞ்சா உனக்கும் எனக்கும் கல்யாணம் முடிஞ்சதும் நாம வேறொரு இடத்துக்கு போய் நீ, நான் நிலா பாப்பா மூணு பேரும் சந்தோஷமா இருக்கலாம் என்று கூறுகிறார். இதைக் கேட்டு அமிர்தா அதிர்ச்சி அடைகிறார்.
மறுநாள் காலையில் தூங்கி எழுந்திருக்க கணேஷ் இல்லாமல் இருக்க அமிர்த்தா மாறி மாறி எல்லா கதவையும் தட்ட கடைசியில் ஒரு கதவு திறக்கிறது. இதனால் சந்தோஷப்பட எதிரில் கணேஷ் மாப்பிள்ளை கோலத்தில் கல்யாணத்திற்கு தேவையான பொருட்களுடன் நிற்க அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.