காலையிலேயே பாக்கியாவால் அவமானப்பட்டுள்ளார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி பார்க்கிங் வந்திருந்த போது பாக்யா மற்றும் ராமமூர்த்தியும் அங்கு வர அக்கம் பக்கத்தினர் வந்து பாக்யா படிப்படியாக வளர்ந்து வருவதை பாராட்ட கோபி கடுப்பாகிறார். 

வீட்ல இருக்காங்களா எப்படி என்ன சொன்னாங்க என்று கேட்க அங்கெல்லாம் என்ன சப்போட்டா இருந்து ஊக்கப்படுத்தினாங்க. அதைவிட பெரிய மோட்டிவேஷன் யாருன்னு கேட்டா நீ எல்லாம் ஒண்ணுத்துக்குமே லாய்க்கு இல்ல உன்னால எதுவுமே செய்ய முடியாதுன்னு நம்மள அவமானப்படுத்துறவங்க தான் என சொல்ல கோபியின் முகம் மாறுகிறது. அவங்க முன்னாடி ஜெயிச்சு காட்டணும்னு சொல்லும் போதே நமக்குள் வெற்றியென்ற உணர்வு வந்துவிடும் என பாக்கியா பேசுகிறார். 

அதைத்தொடர்ந்து அமிர்தா ரூமுக்கு இருக்க அங்கே வந்த எழில் இப்படியே எவ்வளவு நாளைக்கு ரூமுக்குள்ள இருக்க போற? நீ நான் நிலா மூணு பேரும் வெளியே போயிட்டு நிலாவ எந்த ஸ்கூல்ல சேர்க்கலாம் என்று பார்த்துவிட்டு ரெஸ்டாரண்ட் போய் சாப்பிட்டு வரலாம் என கூப்பிடுகிறார். அமிர்தா வேண்டாம் என சொல்ல நிலாவை வைத்து சம்மதிக்க வைக்கிறார். 

அதனை தொடர்ந்து கோபி காலையிலேயே அவமானப்படுத்திட்டா வெளில சொல்லவும் முடியல சொல்லாம இருக்கவும் முடியல என புலம்பி கொண்டு இருக்க ரூமுக்குள் வரும் ராதிகா ஃபோனை தேட கோபி ஃபோனை எடுத்துக் கொடுத்து சாரி கேட்கிறார். ஏதாவது பேசு பேபி என்று சொல்ல ஆபிஸ் கிளம்பலையா என்று கேட்க கோபி இதுக்கு நீ பேசாமலேயே இருந்திருக்கலாம் என அதிர்ச்சியடைகிறார். போகணும் என்று சொல்லி சமாளிக்க சரி ஆறு மணிக்கு நான் உங்க ஆபீஸ் வந்து விடுறேன் என சொல்ல கோபி இன்னும் அதிர்ச்சி அடைகிறார். 

என் ஆபீஸ்க்கா எதுக்கு என்று கேட்க ரிசப்ஷன் இருக்குல்ல என்று சொல்ல ஏன் உங்க ஆபீஸ்ல ரிசப்ஷன் இல்லையா எங்க ஆபீஸ் ரிஷப்சனை நீ எதுக்கு பாக்கணும் என்று கேட்க ராதிகா கடுப்பாகிறார். என் ஆபீஸ்ல வேலை பார்க்கிறவங்களோட மேரேஜ் ரிசப்ஷன் இருக்கு அது உங்க ஆபீஸ் பக்கத்துல இருக்க மண்டபத்தில் தான் நடக்குதுன்னு ஏற்கனவே சொன்ன இல்ல அதுக்கு போகணும் அதுக்காக நான் வரேன் என்று சொல்கிறார். 

அதுக்கு எதுக்கு என் ஆபீஸ் வரணும் என்று கோபி கேட்க மண்டபம் பக்கத்துல தான உங்க ஆபீஸ் இருக்கு உங்கள பிக்கப் பண்ண வரேன் என்று சொல்ல வேண்டாம் நானே உன்னை வந்து பிக்கப் பண்ணிக்கிட்டு ரிசப்ஷன் போகலாம் என்று சொல்லி சமாளிக்க எதுக்கு தேவையில்லாத அலைச்சல் என்று ராதிகா சொல்ல இதுல எனக்கு எந்த அலைச்சலும் இல்லை என கோபி சமாளித்து அனுப்பி வைக்கிறார். ராதிகா மட்டும் என் ஆபீஸ் வந்து ஆபீஸ் பூட்டு போட்டு இருப்பதை பார்த்தால் எனக்கு தான் பெரிய ரிசப்ஷன் என புலம்புகிறார். 

அதைத்தொடர்ந்து பாக்யா ஜெனி வீட்டிற்கு வருகிறார். அவருடைய அப்பா அம்மா இங்க எதுக்கு வந்தீங்க வெளிய போங்க என்று சொல்ல நான் செழியன் விஷயமா பேச வரல அது எதுவாக இருந்தாலும் கோர்ட்ல பேசிக்கட்டும் நான் வேறொரு விஷயம் பேச வந்தேன்னு சொல்ல ஜெனியிடம் பேசக்கூடாது என தடை போடுகின்றனர். ஆனால் ஜெனி நீங்க வாங்க ஆன்ட்டி என ரூமுக்கு அழைத்துச் சென்று விட ரெஸ்டாரன்ட் தொடங்கும் விஷயம் குறித்து சொல்ல ஜெனி சந்தோஷப்படுகிறார். இந்த சந்தோஷத்தை பார்க்கத்தான் நான் வந்தேன் என்று சொல்லி அவர் கிளம்புகிறார். 

அதனைத் தொடர்ந்து வெளியில் சென்று வந்த ஜோசப் அண்ணா குழந்தைக்கு எப்போ பேட்டரிசம் வைக்க போறீங்க? பேர் என்ன வைக்க போறீங்கன்னு கேட்டாரு, என்று சொல்ல இப்ப எதுக்கு அதெல்லாம் அப்படியே பேர் வைக்கணும்னாலும் செழியன் கிட்ட கேட்கணும்ல என்று ஜெனி சொல்ல ஜோசப் கடுப்பாகிறார். அவன் கிட்ட எதுக்கு கேட்கணும் என்று சொல்ல நானும் செழியனும் பிரிஞ்சாலும் என் குழந்தைக்கு அவன் தானே அப்பா என ஜெனி அதிர்ச்சி கொடுக்கிறார். ஜோசப் அவள பத்தி இப்படியெல்லாம் நீ நெனச்சுக்கிட்டு இருக்காத நாளைக்கு கோர்ட்டுக்கு வந்து உன்ன பத்தி எவ்வளவு புகார் சொல்ல போறான் பாரு என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.