நீதிமன்றத்தில் சண்டைக்கு இறங்கி உள்ளார் ஈஸ்வரி. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ஜெனி மற்றும் செழியன் விவாகரத்து கேஸ் காரணமாக எல்லோரும் கோட்டுக்கு வந்திருக்க செழியன் ஜெனியை பார்த்துக்கொண்டிருக்க அதை கவனித்த கோபி இடம் மாறி உட்காருகிறார். 

மறுபக்கம் ஜெனியின் அப்பா இதை கவனித்து நீ ஜெனியை இடம் மாறி உட்கார வைக்கிறார். செடியின் ஜெனியிடம் பேச முயற்சி செய்ததை தடுத்து நிறுத்துகிறார். அதன் பிறகு நீதிபதி செழியன் ஜெனிஃபர் பெயரை சொல்லி கூப்பிட இருவரும் முன்னாடி சென்று நிற்கின்றனர். 

முதலில் ஜெனியின் வழக்கறிஞர் இருவரும் காதலித்து எதிர்ப்புகளை மீறி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க ஆனா கொஞ்ச நாளைக்குள்ளேயே ரெண்டு பேருக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் வந்துடுச்சு. செழியன் ரொம்ப டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிட்டான். அது எல்லாம் பொறுத்துக்கிட்டு தான் என் கட்சிக்காரர் வாழ்ந்துகிட்டு இருந்தாங்க. ஆனா செழியனுக்கு மாலினி என்ற பெண்ணோட தொடர்பு ஏற்பட்டு தற்போது வரை அந்த தொடர்பு இருந்து வருகிறது என்று சொல்கிறார். 

இதைக் கேட்ட ஈஸ்வரி ஜெனியின் அப்பாவிடம் என்னங்க உங்க பொண்ணு மட்டும் தான் கஷ்டப்பட்டாளா என் பேரன் கஷ்டப்படலயா? என்னமோ உங்க பொண்ணு மட்டும் தான் கஷ்டப்பட்ட மாதிரி எழுதி கொடுத்து இருக்கீங்க என்று சத்தம் போட நீதிபதி ஈஸ்வரியை எச்சரித்து உட்கார வைக்கிறார். ஆனால் ஈஸ்வரி திருமணமும் எழுந்து சென்று நீதிபதி அருகே சென்று என் பேரன் தப்பு பண்ணிட்டான் தான். தப்பு நடக்காத குடும்பம் எங்க இருக்கு அதுக்காக விவாகரத்து ஒன்னு தான் தீர்வா என்று பேச நீதிபதி அவரை வெளிய அனுப்ப சொல்ல கோபி அம்மாவை கூட்டிக்கொண்டு வெளியே வருகிறார். 

இப்படி எல்லாம் உள்ள பேசினீங்க நீதிமன்ற அவமதிப்புன்னு சொல்லி உங்கள தூக்கி ஜெயிலில் போட்டுடுவாங்க என்று சொல்ல ஈஸ்வரி பயப்படுகிறார். பிறகு நீதிபதி இந்த வழக்கை இந்த மாதம் 18ஆம் தேதி ஒத்தி வைப்பதாக தீர்ப்பு கூறுகிறார். 

மறுபக்கம் எழில் வண்டியில் வந்து கொண்டிருக்கும் போது திடீரென எதிரே ஒரு வண்டி வந்து நிற்கிறது. எழில் சந்துல இருந்து இப்படியா வேகமா வருவீங்க? நான் ஹாரன் அடிச்சிட்டு தானே வரேன் என்று கோபப்பட பிறகு கணேஷ் ஹெல்மெட்டை கழட்டி என் அமிர்தாவையும் நிலாவையும் என்கிட்ட கொடுத்திடு என்று பேசுகிறார். எழில் அது எப்படி கொடுக்க முடியும்! ரெண்டு உயிர். 

அவங்க இப்போ என் வீட்டுல சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருக்காங்க அப்படியெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்ல கணேஷ் என் நிலைமையை புரிஞ்சுக்க என்று கூறுகிறார். அமிர்தா இப்போ என் பொண்டாட்டி நிலா என் பொண்ணு என்று சொல்ல கணேஷ் காதை பொத்திக்கொண்டு அப்படி சொல்லாத என்னால கேட்க முடியல என டென்ஷன் ஆகிறார். 

எழில் நீ அமிர்தாவின் சந்தோஷத்தை புரிந்து கொண்டு விலகி போயிடு என்று சொல்ல நான் அமிர்தாவையும் நிலாவையும் கண்டிப்பாக கூட்டிட்டு போவேன் என்று சொல்ல எழில் முடிந்தால் என்ன மீறி கூட்டிட்டு போ என்று சவால் விடுகிறார். 

திரும்பவும் இந்த மாதிரி வழி மறிச்சு பேசுறது வீட்டுக்கு வந்து சண்டை போடுவது என்று ஏதாவது பண்ணு நான் சும்மா இருக்க மாட்டேன் என எச்சரிக்கிறார். 

இங்கே கோர்ட்டில் ஜெனி தனியாக உட்கார்ந்து கொண்டிருக்கும் போது திடீரென அவருக்கு விக்கல் வந்துவிட செழியன் ஓடிப் போய் காரில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க ஜெனி அதை வாங்காமல் தயக்கத்துடன் நிற்க செழியன் மேசையின் மீது வைத்துவிட ஜெனி அந்த தண்ணீரை எடுத்து குடித்ததும் செழியன் சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.