வீட்டை விட்டு வெளியே போக சொன்ன கோபிக்கு பாக்யா சவால் விட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி‌. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் உங்களுக்கு கொடுத்த டைம் நேத்தோட முடிஞ்சு போச்சு. பணத்தைக் கொடுக்கிறதா நீங்க என்ன ஆச்சு? எங்க பணம்? யார் கொடுக்க போறீங்க? என கேட்க பாக்கியா மற்றும் எழில் என இருவரும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர்.

அதன் பிறகு எங்க அப்பா ஊர்ல இருக்க எல்லா சொத்தையும் என் பேருக்கு மாத்தி எழுதறதா சொன்னாரு, ஊர்ல இருக்க சொத்து அவர் சம்பாத்தியம் என எல்லாத்தையும் சேர்த்தாலும் இந்த வீட்டோட மதிப்புக்கு ஈடாகுல, அதுக்கு மேல 20 லட்சம் ரூபாய் தேவைப்படுது அதை கொடுத்துட்டா இந்த வீட்டை எங்க அப்பா பேரு அல்லது எங்க அம்மா பேருக்கும் எழுதி கொடுத்து விடுகிறேன். அந்த பணத்தை யார் கொடுக்க போறீங்க என கேட்க பாக்கியாவும் எழிலும் அமைதியாக இருக்க கோபி நக்கலாக பேச பாக்கியா நான் கொடுக்கிறேன் என சவால் விடுகிறார்.

அந்த பணத்துக்கு அதிகபட்சம் ஆறு மாசம் டைம் வேண்டும் என சொல்ல கோபி அது 20000 இல்ல 20 லட்சம் ரூபாய் கணக்கு தெரியுமா பாக்கியலட்சுமி என கேட்க அதெல்லாம் நல்லாவே தெரியும் உங்களுக்கு நான் பணம் கொடுக்கிறேன் என சவால் விடுகிறார்.

பணம் கொடுக்கலைன்னா என கோபி கேட்க நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன் என பாக்யா பதிலடி கொடுக்கிறார். பிறகு கோபி கிளம்பிச் செல்ல ஈஸ்வரி பாக்யாவை திட்டுகிறார். பாக்கியா அவர்தான் கணக்கில் கரெக்டா இருந்து பணத்தைக் கேட்கிறாரே கொடுத்து தானே ஆகணும் அத்தை நான் பார்த்துக்கிறேன் என சொல்கிறார்.

நான் மட்டும் போய் கோபி கிட்ட பேசலனா எல்லாரையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்லி இருப்பான். இந்த வீட்டு பிரச்சனையை முடிச்சு வச்சது நானும் என் வீட்டுக்காரரும் தான் என ஈஸ்வரி சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.

அதன் பிறகு பாக்யா, ஜெனி மற்றும் செல்வி என மூவரும் கிச்சனில் சமையல் வேலை செய்து கொண்டிருக்க அங்கு வரும் அமிர்தா பாட்டி இருக்காரா என பயந்து எட்டிப் பார்க்க அதை பார்க்கும் ஜெனி உள்ளே அழைக்கிறார். பிறகு ஜெனி முதல்முறையாக சப்பாத்தி செய்த கதையை சொல்லி சிரிக்கின்றனர்.

மறுபக்கம் எழில் நிலா பாப்பாவை தூக்கிக் கொண்டு வெளியில் நின்று கொண்டிருக்க அங்கு வரும் இனியா எழிலிடம் பேசி பாப்பாவை வாங்கி கொஞ்சுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.