பாய் பிரண்டுடன் இனியா சேட் செய்ய ராதிகா கேட்ட கேள்வியால் கோபி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா அடுத்தடுத்து ஏழு நாட்கள் கல்யாண ஆர்டர் இருப்பதாக சொல்ல அமிர்தா உங்களோட நானும் வருவேன் என சொல்கிறார். உடனே ஜெனி அப்போ நானும் வருவேன் என சொல்ல பாக்கியா இப்போ உனக்கு அஞ்சு மாசத்துக்கு மேல ஆயிடுச்சு நீ வர வேண்டாம், வீட்டில் இருந்து உனக்கு நிறைய வேலை இருக்கு என சொல்கிறார்.

அதன் பிறகு இனியா டியூஷனில் இருக்கும்போது திடீரென சரண் என்ற பையன் கையில் ரோஸ் உடன் உள்ளே என்ட்ரி கொடுக்கிறான்‌. அதன் பிறகு அவன் இனியாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து பேனா இருக்கா என கேட்க இனியா பேனாவை எடுத்துக் கொடுக்க சும்மா ஃபன் என்கிட்டயே பேனா இருக்கு என நக்கல் அடிக்கிறான்.

மறுபக்கம் பாக்கியா வீட்டில் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அப்போது ஜெனி நான் போய் அமிர்தாவையும் எழிலையும் கூட்டிட்டு வரேன் என எழுந்து கொள்ள ஈஸ்வரி அவங்க வந்தா நான் சாப்பிட மாட்டேன் என முரடு பிடிக்கிறார்.

அதன் பிறகு ராமமூர்த்தி இந்த டைனிங் டேபிள்ல எல்லாரும் எவ்வளவு சந்தோஷமாக உட்கார்ந்து சாப்பிடுவோம் என சொல்லி வருத்தப்பட அது எல்லாம் எப்படியோ நடந்த மாதிரி இருக்கு எல்லாம் இந்த எழிலால தான் என செழியன் சொல்ல ஏன் உங்க அப்பா ஒண்ணுமே பண்ணலையா சும்மா அவனை நோண்டிக்கிட்டு இருக்காத என பாக்யா கோபப்படுகிறார்.

அடுத்து டியூஷன் முடித்து போகும் போது சரண் இனியாவை பார்த்து பாய் சொல்ல பக்கத்திலிருந்த பெண் உடனே கை கொடுத்து தன்னை அறிமுகம் செய்து கொள்ள உடனே இனியாவும் கையை கொடுத்து ஹாய் சொல்லி பாய் சொல்லிவிட்டு வீட்டிற்கு வருகிறார். அதன் பிறகு இனியா படிப்பது போல போனை வைத்துக் கொண்டு சரணுடன் சாட் செய்து கொண்டிருக்க கோபி இது எல்லாம் கண்டுகொள்ளாமல் லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இனியா ரொம்ப நேரம் போன் யூஸ் பண்ணிக் கொண்டிருப்பதை பார்த்த ராதிகா படிக்காம என்ன பண்ணிட்டு இருக்க படிக்க வேண்டியது எல்லாத்தையும் படிச்சு முடிச்சிட்டியா? அப்படி போன்ல யாரு கிட்ட தான் சேட் பண்ணிட்டு இருக்க என கேட்க இதெல்லாம் நீங்க எதுக்கு கேக்குறீங்க என இனியா கோபப்பட கோபி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.