
பாக்கியலட்சுமி சீரியலை ரசிகர்கள் பங்கம் செய்து வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி பாக்யாவை பிரிந்து சென்று பாக்யாவுக்கு தொடர்ந்து பல்வேறு கொடைச்சல்களை கொடுத்து வர அதை எல்லாம் ஏற்று தனி ஆளாக போராடி வருகிறார் பாக்யா.

இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் நடிகர் ரஞ்சித் நம்ம ஊரு பழனிசாமியாக இந்த சீரியலில் என்ட்ரி கொடுத்தார். இதைத்தான் ரசிகர்கள் தற்போது கலாய்த்து வருகின்றனர்.
காரணம் பாக்கியா தொடங்கிய ஈஸ்வரி கேட்டரிங் தொடங்கி வைத்தது நடிகர் ரஞ்சித் மற்றும் அவருடைய மனைவி பிரியா ராமன் தான். ஆனால் அதை எல்லாம் மறந்த சீரியல் குழு தற்போது அவரை ஏன் பழனிச்சாமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளது.
இதைத்தான் ரசிகர்கள் பலரும் தற்போது கலாய்க்க தொடங்கியுள்ளனர். பாக்கியலட்சுமி சீரியல் கதையை நீங்க மறந்துட்டீங்களா இல்ல நடந்ததையெல்லாம் ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைத்தீர்களா என பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

மேலும் இனி இந்த சீரியலில் பாக்கியாவுக்கு ஜோடியாக பழனிச்சாமி தான் இருப்பார் எனவும் சொல்கின்றனர். காரணம் பாக்கியலட்சுமி இந்தி வெர்ஷனில் கணவனை பிரியும் நாயகி இரண்டாவது திருமணம் செய்து கொள்வார். அதேபோல் தமிழ் சீரியலிலும் நடந்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது கேள்விக்குறியாகவும் விவாதமாகவும் மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.