விபத்தில் சிக்கி உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
பாக்கியலட்சுமி வீட்டில் வேலை செய்பவராக செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கம்பம் மீனா. வேலைக்கார கதாபாத்திரம் என்றாலும் சீரியலில் தொடர்ந்து இடம் பெறும் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவும் காமெடி செய்து நம்மை சிரிக்க வைக்கும் கதாபாத்திரமாகவும் இருந்து வருகிறது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து ஷுட்டிங் சம்மந்தப்பட்ட விதவிதமான போட்டோக்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது கையில் பெரிய கட்டுடன் விபத்து ஒன்றில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சீக்கிரம் சரியாகிடுவீங்க செல்வி அக்கா எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.