கதாபாத்திரம் வில்லனா? காமெடியனா? எனக்கு எதுவுமே புரியல என வீடியோவில் பேசியுள்ளார் சதீஷ்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சதீஷ்.

மிகவும் எதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வரும் இவரது கதாபாத்திரம் வில்லனா காமெடியனா? என தெரியாமல் நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் இதை தான் தெரிவித்துள்ளார்.

என்னால முடிஞ்ச வரைக்கும் வில்லனாக நடிக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் ஆனா வில்லனா நடிக்கிறது ரொம்ப கஷ்டம், எனக்கு வில்லனாக நடிப்பதில் பிடிப்பு இல்லை, வில்லன் என்றாலே ஒரு பிம்பம் இருக்கு ‌ என கூறியுள்ள இவர் பார்க்கலாம் போற வரைக்கும் போவோம் என தெரிவித்துள்ளார்.

கோபி இப்படி பேசி உள்ளதை பார்த்தால் கதாபாத்திரம் முழு வில்லனாக மாறினால் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இவருடைய கதாபாத்திரம் முழுமையாக வில்லனாக மாற்றப்பட்டால் சீரியலில் இருந்து விலகவும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

கோபி வெளியிட்ட வீடியோவை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.