இனியா உடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்க அப்போது வசமாக சிக்கி உள்ளார் கோபி.

Baakiyalakshmi Episode Update 18.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஊருக்குச் சென்றுவிட பாக்கியலட்சுமி குடும்பம் அங்கு பொங்கல் வைத்து பொங்கலை சிறப்பாக கொண்டாடுகின்றனர். பிறகு ஊர் மக்கள் அனைவருக்கும் சாப்பாடு செய்து பரிமாறுகின்றனர்.

இனியாவுடன் வீடியோ காலில் மய்யூ.. வசமாக சிக்கிய கோபி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

சாப்பாடு செய்யும் வேலைகள் அனைத்தையும் கோபியின் அப்பாவே பார்த்துக் கொண்டார். பிறகு செழியனும் ஜெனியின் ஒரு பக்கம் செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் எழிலும் அமிர்தாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஈஸ்வரி இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து கோபம் அடைகிறார்.

அந்த நேரத்தில் அந்தப் பக்கம் வந்த பாக்கியவதி அழைத்துச் சென்று அந்த பொண்ணு எதுக்கு கூட்டிட்டு வந்த. அவங்க ரெண்டு பேரும் சிரித்து சிரித்துப் பேசுவதைப் பார்த்தால் எனக்கு கோவமா வருது. எனக்கு என்னவோ இது சரியா படல என கூறுகிறார். அவங்க ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் அத்தை அவ்வளவுதான் என கூறுகிறார். செழியன் ஜெனிக்கு இதையே தான் சொன்னேன் என ஈஸ்வரி சொல்கிறார்.

பிறகு கோபி ராதிகாவின் போன் கால் வர உள்ளே இருந்து எழுந்து வந்து விடுகிறார். அதேபோல் மயு இனியாவுக்கு வீடியோ கால் செய்கிறார். அப்போது இனியா கோலத்தைப் பார்க்கிறியா என கோலம் போட்டு இருப்பதை காண்பிக்கிறார். அதன்பிறகு வீட்டைப் பார்க்கிறார் என வீட்டைச் சுற்றி வீடியோ காலில் காண்பிக்கிறார். அந்த நேரத்தில் கோபியை போனில் பார்த்துவிடுகிறார் மயூ. கோபி அங்கிள் அங்கே என்ன பண்றாரு என யோசிக்கும் நேரத்தில் இனியாவை யாரோ உள்ளே கூப்பிட போனை வைத்து விட்டு செல்கிறார் இனியா.

மேலும் கோபியின் அப்பா சமையல் செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த எழிலிடம் ஈஸ்வரி பாட்டு அந்த பொண்ணோட இப்படி பேசிக்கிட்டு இருக்காத பார்க்கிறவங்க தப்பா பேசுவாங்க என கூறுகிறார். அட உங்க பாட்டி அந்த காலத்திலேயே இன்னும் இருக்கீங்க என என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார் எழில்.

பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். கோபியின் அப்பா நான் பரிமாறுகிறாள் என சொல்ல தாத்தா நான் பரிமாறுகிறான் என எழில் எந்திரிக்க கூடவே அமிர்தாவும் நான் பரிமாறுகிறேன் என எந்திரிக்கிறார். ஈஸ்வரி 2 பேரும் உட்காருங்க உங்கள் தாத்தாவும் பாக்கியாவும் பாத்துப்பாங்க என கூறுகிறார்.

இனியாவுடன் வீடியோ காலில் மய்யூ.. வசமாக சிக்கிய கோபி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

வந்தவர்கள் எல்லோரும் கோபி எங்க ஆளையே பார்க்க முடியல நல்ல நாளில் கூட லீவு கிடையாதா எப்ப பாத்தாலும் போன் பேசிட்டு இருக்கான் என கேட்கிறார்கள். இதனால் வீட்டில் உள்ளவர்கள் என்ன சொல்வது என தெரியாமல் நிற்கின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.