தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி.

இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அமிர்தா குழந்தையுடன் ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்க அங்கு வரும் ஜெனி அமிர்தாவுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு பிறகு பாப்பாவுக்கு ஊட்டி விட்டுக்கொண்டே பாட்டி பேசியதை பற்றி எல்லாம் நினைத்து கவலைப்படாதீங்க, அவங்க இப்படித்தான் பிடிக்காத விஷயம் எது நடந்தாலும் கோபப்படுவார்கள். நானும் ஆரம்பத்தில் ரொம்ப பயந்தேன் அதுக்கப்புறம் அப்படியே சரியாயிடுச்சு என கூறுகிறார்.

பிறகு எழில் மற்றும் பாக்யா என இருவரும் கீழே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அங்கு வரும் ஈஸ்வரி கோபி கொடுத்த கெடு முடிஞ்சு போச்சு என்ன பண்ண போறீங்க என சத்தம் போட்டுவிட்டு வேக வேகமாக ராதிகா வீட்டிற்கு செல்கிறார். அங்கு கோபி ஈஸ்வரியை பார்த்ததும் எனக்கு தெரியும் மா என் மனசு சொல்லிக்கிட்டு இருந்தது நீங்க கண்டிப்பா இங்க வருவீங்கன்னு. இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் அந்த வீட்டில் இருக்க உங்களுக்கு பிடிக்காது என்று எனக்கு தெரியும் என சொல்ல நான் இந்த வீட்ல தங்க வரல உன் கிட்ட பேசிட்டு போக வந்தேன் என கூறுகிறார்.

நீ அந்த வீட்டை திரும்ப கேட்க கூடாது என சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். பாக்கியா நமக்கு நிறைய துரோகம் பண்ணி இருக்கா தான் ஆனால் அதை நாம திருப்பி பண்ண கூடாது, எனக்காக நீ அந்த வீட்டை கேட்கக்கூடாது என்று சொல்ல ராமமூர்த்தி ஊர்ல இருக்க எல்லா சொத்தையும் உன் பேருக்கு மாத்தி தரேன் நீ அதுக்கு பதிலா அந்த வீட்டை விட்டுவிட வேண்டும் என சொல்ல கோபி இது நியாயமா படுது யோசிக்கிறேன் என சொல்கிறார்.

இரவு வேகவேகமாக வீட்டுக்கு வரும் கோபி எழில் மற்றும் பாக்யாவை அழைத்து உங்களுக்கு கொடுத்த ஒரு மாத டைம் முடிஞ்சு போச்சு என்ன பண்ண போறீங்க? என்ன பண்ணலாம்? பணம் கொடுக்கிறதா சொன்னிங்களே என்ன ஆச்சு என கேட்க பாக்கியா இப்ப என்ன வீட்டை காலி பண்ணனும் அதானே என கேட்க ஈஸ்வரி இப்ப எதுக்கு முந்திரிக்கொட்டை மாதிரி பேசுற? அவன் நல்ல முடிவோட வந்திருந்தாலும் நீயே பேசி அவனை கெடுத்துருவ போல என கோபப்படுகிறார்‌. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.