இனியாவை ரூமில் வைத்து பூட்டியுள்ளார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி வீட்டுக்கு இனியாவை பார்க்க வந்துள்ள பாக்யாவை கோபி கண்டபடி பேசி அசிங்கப்படுத்துகிறார். இனியாவை வைத்து வெளியே வரும் கோபி அவன் வெளியே வராதபடி சாவியை வைத்து பூட்டு போடுகிறார்.

இனியாவை ரூமில் வைத்து பூட்டிய கோபி.. ராதிகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி, கோபிக்கு ஆப்பு ரெடி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்.!!

பாக்கியா, எழில் மற்றும் தாத்தா என மூவரும் இனியாவை அழைக்க இனியா ரூமில் இருந்து வெளியே வராமல் இருக்கிறார். கோபி நீ என்னதான் கத்துனாலும் கதறினாலும் என் பொண்ணு பார்க்க முடியாது என கூறுகிறார்.

அன்னைக்கு என் குடும்பம் மொத்தத்தையும் உன் பக்கம் இழுத்துகிட்டு என்னை எவ்வளவு அசிங்கப்படுத்தி வெளியே அனுப்புன, என் குழந்தைகளை பார்க்காமல் எனக்கு எப்படி வலிச்சிருக்கும் இப்ப தெரியுதா நல்லா வருத்தப்படு சந்தோஷமா இருக்கு என கோபி முழு வில்லத்தனத்தை காட்டுகிறார்.

இனியாவை ரூமில் வைத்து பூட்டிய கோபி.. ராதிகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி, கோபிக்கு ஆப்பு ரெடி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்.!!

என்னம்மோ சொந்த காலில் நிற்பேன் ஜெயிச்சு காட்டுவேன் என வீரவசனம் எல்லாம் பேசின, இன்னைக்கு என் வீட்டு வாசல் படி முன்னாடி வந்து நிற்கிற. சூடு சொரணை, மானம், வெட்கம் எதுவுமே இல்லையா? நீயா வெளிய போறியா இல்ல கழுத்தை பிடித்து வெளியே தள்ளவா என கோபி ஆவேச பேச அடிக்க பாய்கிறார் அவரது அப்பா.

பிறகு எழில் பாக்கியாவை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வர வீட்டுக்கு வரும் பாக்கியா கதறி அழுகிறார். நடந்த விஷயத்தை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல அவர்களும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு கோபி அப்பா வீட்டுக்கு வந்து பாக்யாவை சமாதானம் செய்கிறார்.

அடுத்து மீண்டும் ராதிகா வீட்டுக்கு வர அவர் இனியாவிடம் கோபமாக பேச நீ வெளியே வந்து உன் அம்மாகிட்ட பேசி இருக்கலாம்ல, உன்ன பாக்க எவ்வளவு பாத்துட்டு ஓடி வந்தா என சொல்ல நான் என்ன பண்ண முடியும் டாடி தான் உள்ள வச்சு லாக் பண்ணிட்டாரு. அதுவுமில்லாம நான் அம்மா கிட்ட பேசி இருந்தா டாடி என் மேல கோபப்பட்டு இருப்பாரு, எனக்கு அம்மாவும் வேணும் டாடி வேணும் டாடி இங்கிருந்து நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகணும் அதுக்காகத்தான் நான் அமைதியாக இருந்தேன் என தாத்தாவிடம் சொல்ல அது எல்லாம் நடக்காத விஷயம் என அவர் கூறுகிறார்.

இனியாவை ரூமில் வைத்து பூட்டிய கோபி.. ராதிகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி, கோபிக்கு ஆப்பு ரெடி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்.!!

இல்லை தாத்தா டாடிக்கு நான் ரொம்ப முக்கியம். அதனால கண்டிப்பா நடக்கும். நான் டாடிய நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன் என சொல்ல இதனால் அதிர்ச்சி அடையும் ராதிகா எங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு அது நடக்காது என சொல்ல நடக்கும் கண்டிப்பா டாடியை உங்க கிட்ட இருந்து பிரித்து நான் வீட்டுக்கு கூட்டிட்டு போவேன் என சவால் விடுகிறார் இனியா. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.