ஸ்கூல் பீஸ் கட்ட பாக்யா செய்த வேலை ஒரு பக்கம் இருக்க இனியா அதிர்ச்சி முடிவு எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த ராதிகாவிடம் ஏன் ஒரு மாதிரி இருக்க என்ன அவருடைய அண்ணன் கேட்க கோபியை பார்த்ததாக கூறுகிறார். அவரிடம் பேசினேன் எனக்கே கேட்க இல்ல அவர் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கார் ஹோட்டல் உள்ள போனதை பார்த்தேன். எனக்கு கில்டிங்கா இருக்கிறது என சொல்ல இதுல கில்ட்டியாக எதுவுமே இல்ல. அந்த பாக்யா ஒரு ராட்சசி போல வீட்ல இருக்க எல்லோரும் இங்க வந்து சத்தம் போட்டுட்டு போகும் போது அவங்க எப்படி பட்டவங்கன்னு தெரியுது.

கோபி தெரிஞ்சோ தெரியாமலோ மேல ஆசைப்பட்டார் நீயும் அவர் மேல ஆசை வச்சுட்டேன் இப்போ உங்களுக்கு விவாகரத்தும் ஆகிடுச்சு நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறது தான் நல்லது என ராதிகாவின் அம்மா சொல்ல அவருடைய அண்ணனும் அதுதான் சரியென கூறுகிறார். இன்னொரு பக்கம் பணத்துக்காக பாக்கிய அலைந்து கொண்டிருக்க பணம் கொடுக்க வேண்டியவர்கள் இன்னைக்கு நாளைக்கு என கை விரித்து விடுகின்றனர்.

எழில் தயாரிப்பாளர் இல்லை படத்தின் கதையில் மாற்றம் செய்து விட்டாயா என கேட்க இல்லை என சொல்லும் எழிலால் நான் சொல்ற மாற்றத்தை பண்ணா தான் இந்த படத்தை என்னால தொடர்ந்து பண்ண முடியும் இல்லனா நான் இந்த கதையை பண்ண மாட்டேன் என அதிர்ச்சி கொடுக்கிறார். பணத்துக்கு என்ன பண்ணுவது என தெரியாமல் தலையில் அடித்துக் கொள்ளும் பாக்கியா கையில் இருக்கும் வளையலை பார்த்து அதை அடகு வைக்க முடிவு செய்து செல்வியிடம் கொடுத்து அனுப்புகிறார்.

இந்த பக்கம் இனியாவை பார்க்க கோபி ஸ்கூலுக்கு வந்திருக்க அப்பாவை பார்த்த இனியா அவரைப் பிடித்துக் கொண்டு அழுது புலம்புகிறார். அம்மா இன்னும் பீஸ் கட்டல இன்னைக்கு தான் லாஸ்ட் டேட் என்ன சொல்லு கோபி எனக்கு மெசேஜ் வந்தது அதை பார்த்துட்டு நான் வந்து பீஸ் கட்டிட்டேன் என சொல்கிறார். டாடி என்னைக்கும் உங்களோட கூட்டிட்டு போய்டுங்க எனக்கு அந்த வீட்டில் இருக்கவே புடிக்கல என இனியா சொல்ல கோபி கூடிய சீக்கிரம் ஒரு வீட்டை பார்த்துட்டு உன்னை கூட்டிட்டு போறேன் என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.