காப்பியை வைத்து கலவரம் உண்டாகியுள்ளது. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஜெனி அசந்து தூங்கி விட ராமமூர்த்தியும் தூங்கி விடுகிறார். திடீரென இருந்து என்ன ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல பசி வேற எடுக்குது என்று மாத்திரை போட மாத்திரை டப்பாவை திறக்க எது சாப்பாட்டுக்கு முன்னாடி போட வேண்டிய மாத்திரை எது பின்னாடி போட வேண்டிய மாத்திரை என்று தெரியாமல் இன்னைக்கு ஒருநாள் மாத்திரை சாப்பிடாமல் விட்டால் ஒண்ணும் ஆகாது என்று சாப்பாடு போட்டு கொண்டு சாப்பிடுகிறார். 

மறுபக்கம் பாக்கியா மளிகை சாமான் பொருட்களை எழுதி கொண்டிருக்க செல்வி பழனிசாமி அண்ணா கூட போய் பார் திறப்பு விழாவிற்கு நீ ஆர்டர் எடுத்துட்டு வந்திருக்க என பேசுகிறார். பிறகு பாக்கியா நாம் மளிகை சாமான் லிஸ்ட் கொடுத்து வீட்டுக்கு போறேன் ஜெனி என்ன பண்ற மாமாவுக்கு சாப்பாடு கொடுத்தாளா தெரியல என்று கிளம்பி வருகிறார். 

வீட்டில் ஜெனி தூக்கத்திலிருந்து எழுந்திருச்சு ரொம்ப நேரம் தூங்கிட்டு போல தாத்தா சாப்பிட்டாரா இல்லையா என்று தெரியவில்லை என்று கீழே விழுந்து பார்க்க ராமமூர்த்தி தூங்கிக் கொண்டிருக்க கிச்சனுக்கு வந்து சாப்பிட்டாரா என்று பார்க்கும்போது சாப்பிட்டு இருக்கார் என்று தெரிந்து கொள்கிறார். பிறகு பாக்கியா வீட்டுக்கு வந்து விட மாமாவுக்கு சாப்பாடு கொடுப்பியா மாத்திரை கொடுத்தியா என்று கேட்க சாப்பிட்டு இருக்காரு ஆனா மாத்திரை போட்டாரா என்று தெரியல பாப்பா அழுதுட்டே இருக்கவே அவள தூங்க வச்சுட்டு நானும் அப்படியே தூங்கிட்டேன் என்று சொன்னதும் ரூமுக்கு வந்து மாத்திரை அட்டையை எடுத்துப்பார்த்தேன் ராமமூர்த்தி மாத்திரை போடவில்லை என்றது தெரிய வருகிறது. 

அவரை எழுப்ப முயற்சி செய்ய ராமமூர்த்தி மயக்கத்தில் எழுந்து கொள்ள முடியாமல் இருக்க இவர்கள் அதிர்ச்சி அடைந்து எழிலுக்கு போன் போட்டு ஆட்டோவை கூட்டி வர சொல்கின்றனர். பிறகு ராமமூர்த்தி ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்ல ஜெனி எல்லாம் என்னால தான் என்று அழுது புலம்புகிறார். எனக்கு ராமமூர்த்திக்கு டிரீட்மென்ட் கொடுத்து வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். ஜெனி மன்னிப்பு கேட்க ராமமூர்த்தி எனக்கு ஒன்னும் இல்லம்மா நானாவது பாக்யாவுக்கு இல்ல அமிர்தாவுக்கு போன் போட்டு கேட்டிருக்கணும் என்று சொல்கிறார். 

மறுபக்கம் கமலா ராதிகாவுக்கு காபி போட்டு கொடுக்க அத்தைக்கு போட்டு குடுத்தியா என்று கேட்கிறார். இல்ல நான் எதுக்கு போட்டு தரணும் என்று கேட்க ராதிகா சரி நான் போட்டு தரேன் என்று தெரிந்து கொள்ள கமலா உக்காரு நானே போட்டு தரேன் என்று காபி போட்டு கொண்டு போய் கொடுத்த ஈஸ்வரி அதைக் குடித்து பார்த்துவிட்டு என்ன காபி இது நல்லாவே இல்லை என்று சொல்கிறார். 

கமலாவே வேண்டும் என்று கப்பை தள்ளிவிட்டு எதுக்கு கீழே போட்டு உடைச்சீங்க என்று ஈஸ்வரி மீது பழி போட ராதிகாவின் அங்கு வந்து ஈஸ்வரியை திட்டுகிறார். உடனே ஈஸ்வரி கோபிக்கு போன் போட்டு உடனே கிளம்பி இங்க வா என்று சொல்ல கோபி கிச்சன்ல நிறைய வேலை இருக்கு என்று சொல்ல அப்போ உனக்கு அம்மா முக்கியம் இல்லையா என்று பிளாக்மெயில் செய்கிறார். இந்த நாள் கோபி வரேன் மா என்று போனை வைக்க கோபி வரட்டும் அவன் கிட்ட சொல்லி வச்சிக்கிறேன் என்று ஈஸ்வரி சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.