கிச்சனுக்கு வந்த ராதிகாவை அசிங்கப்படுத்தி உள்ளார் செல்வி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ‌‌ இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் வந்திருக்க வீட்டில் நடந்த பிரச்சனைகளை யோசித்துக் கொண்டிருக்கிறார். இதனால் பழனி என்ன ஆச்சு என கேட்க பாக்கியா முதலில் ஒன்றும் இல்லை என சொல்லி பிறகு வீட்டில் நடந்த பிரச்சனைகளை சொல்கிறார்.

அடுத்ததாக ராதிகா கோபிக்கு காபி போட கிச்சனுக்கு வந்து பாத்திரத்தை எடுக்க செல்வி ஏங்க நான் கழுவி வச்ச பாத்திரத்தை எதுக்கு எடுக்குறீங்க என பிடுங்க, ராதிகா அவரை முறைத்து விட்டு மீண்டும் பாத்திரத்தை பிடுங்குகிறார்.

அதன் பிறகு பால் காய்ச்சி பில்டர் காபி போட பில்டரை எடுக்க ஈஸ்வரி செல்வி என குரல் கொடுக்க அது அம்மாவுக்கு காபி போட பாக்கியா அக்கா டிகாஷன் போட்டு வச்சியிருக்கு என வாங்கி தூரமாக வைக்கிறார்.

அதற்கு அடுத்ததாக காபித்தூள் எங்கே என கேட்க செல்வி தெரியாது என பதில் கூறுகிறார். இதனால் ராதிகா கிளாசை தூக்கி போட்டு உடைக்க ஈஸ்வரி இது என்ன உன்னுடைய வீடா இங்க வந்து அராஜகம் பண்ணிக்கிட்டு இருக்க என கோபப்படுகிறார். ‌‌‌

பிறகு ராதிகா சக்கரை எங்கே என கேட்க செல்வி கடையில் இருக்கு என நக்கல் அடிக்க அவராகவே தேடி எடுத்து இன்ஸ்டன்ட் காபி போட்டு எடுத்துச் சென்று கோபிக்கு கொடுக்க ஈஸ்வரி அவனுக்கு இன்ஸ்டன்ட் காஃபியே பிடிக்காது என்னதான் குடும்பம் நடத்துறாலோ என திட்டுகிறார்.

மேலே வந்த ராதிகா காபியை கொடுத்து உங்க வீட்ல என்னதான் நினைச்சுட்டு இருக்காங்க என்ன அவ்வளவு கேவலமா நடக்குறாங்க என கோபப்பட கோபி சரி அப்போ நம்ம வீட்டுக்கு போயிடலாம் என சொல்ல ராதிகா வர மறுக்கிறார்‌. போயிட்டு உங்க அம்மா கிட்ட என்ன மரியாதையா நடக்க சொல்லுங்க என சொல்ல கோபி அதெல்லாம் என்னால சொல்ல முடியாது என ஆபிசுக்கு கிளம்பி விடுகிறார்.

இந்தப் பக்கம் பழனி பாக்யாவுக்கு ஆறுதல் சொல்லி நீங்க எங்கேயும் போகக்கூடாது அந்த வீட்டுக்கு தான் போகணும் நீங்க நல்லவங்க நல்ல மனசு உடையவங்க, நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பேச்சும் என நீங்க தில்லா வீட்டுக்கு போங்க, நடக்கிறதை பாத்துக்கலாம் என ஆறுதல் சொல்ல பாக்கியா அங்கிருந்து புது தைரியத்துடன் வீட்டுக்கு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌