இங்கிலீஷில் பேசி சீன் காட்டிய ராதிகாவுக்கு பாக்யா பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி கேட்டரிங்கிற்கே கான்ட்ராக்ட் கொடுக்க முடிவெடுத்து இருப்பதாக ராதிகாவின் பாஸ் சொல்ல ராதிகா அதிர்ச்சியடைய பாக்யா சந்தோஷப்படுகிறார்.

அதன் பிறகு பாக்கியா செல்வி ராதிகா மற்றும் பாஸ் நால்வரும் மட்டும் ஒரு ரூமில் இருக்க அப்போது ராதிகாவிடம் இவங்க கிட்ட உங்களுக்கு கேட்கிறது ஏதாவது கேள்வி இருக்கா என பாஸ் கேட்க ராதிகா ஆமாம் இருக்கு என சொல்லி இங்கிலீஷில் அடுத்தடுத்து கேள்விகளை கேட்க பாக்யா பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகிறார்.

உடனே ராதிகாவின் பாஸ் கேள்வி கேட்க சொன்னா என்ன மிரட்டிட்டு இருக்கீங்க பாவம் அவங்க பயந்துட்டாங்க, அவங்க தான் அவங்களுடைய கேரக்டரிங் சர்வீஸ் பத்தி தெளிவா சொல்லி இருக்காங்களே? அது மட்டுமல்லாமல் ராஜசேகர் அவ்வளவு நம்பிக்கையா சொல்லி இருக்கான் கண்டிப்பா அவங்க நல்லா சமைப்பாங்க சமைப்பீங்களா என கேட்க பாக்யா கண்டிப்பா என சொல்கிறார்.

உடனே ராதிகா அப்படி இல்ல சார் இங்க எல்லாரும் வேற வேற இடத்திலிருந்து வந்து வேலை பார்க்கிறார்கள் இங்கிலீஷ் தெரியாம எப்படி இவங்க சமாளிப்பாங்க என கேட்க வாய் திறந்து பேசணும்னு தேவையில்லை கை காட்டினால் கொடுத்து விட போறோம் என சொல்ல ராதிகாவின் பாஸ் அவ்வளவுதான். அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்க என சொல்ல ராதிகா பல்பு வாங்குகிறார்.

அதன் பிறகு பாஸ் எழுந்து வெளியே கிளம்பினதும் எல்லாத்தையும் பிறக்கும்போதே கத்துக்கிட்டு பிறக்குறது கிடையாது, தேவைப்படும்போதுதான் தெரிஞ்சுக்கிறோம் நானும் அப்படி தேவையானதை தெரிந்து கொள்வேன் என பாக்கியா சொல்கிறார்.

இது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை பிசினஸ் பண்ண அறிவும் திறமையும் இருக்கணும் என சொல்ல பாக்கியா நாங்க அதை இங்க கத்துக்கிறோம் நீங்க தினமும் வந்து சுவையா சாப்பிட்டு போங்க என பதிலடி கொடுத்து அங்கிருந்து கிளம்புகிறார்.

இந்த பக்கம் ஈஸ்வரிக்கு ஒரு மணிக்கு மருந்து கொடுக்கணும் என்பதால் அமிர்தா ஜெனி தூங்கிக் கொண்டிருந்ததால் மருந்து கொடுக்கப் போக ஈஸ்வரி கோபப்பட்டு அமிர்தாவை திட்டி தீர்க்கிறார்.

அதன் பிறகு அமிர்தாவும் ஜெனியும் பேசிக் கொண்டிருக்கும் போது பாக்யா வீட்டுக்கு வந்து ஸ்வீட் கொடுத்து விஷயத்தை சொல்ல இருவரும் சந்தோஷப்படுகின்றனர். கூட சமைப்பவர்கள் சிலர் வீட்டுக்கு வர அவர்களுக்கும் ஸ்வீட் கொடுத்து விஷயத்தை சொல்லி கொண்டாடுகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.