அவமானப்படுத்த முயற்சித்த ராதிகாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் பாக்யா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி மயூவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது அங்கு வரும் இனியா டாடி எனக்கு ஒரு சைக்கிள் வேண்டும். டியூஷன்ல படிக்கிற எல்லோரும் சைக்கிள்ல தான் வராங்க நான் மட்டும் தான் நடந்து போறேன் எனக்கும் ஒரு சைக்கிள் வேண்டும் என கேட்கிறார்.

உடனே தாத்தா ராமமூர்த்தி உன்ன தான் நான் தினமும் கூட்டிட்டு போய் கூட்டிட்டு வரேன்ல, அதே போலயே போகலாம் சைக்கிள் எதுக்கு என சொல்ல ராதிகாவும் இன்னும் ஒரு வருஷத்துல டூ வீலரே ஓட்டலாம், இப்ப எதுக்கு சைக்கிள் என கேட்க இனியா நான் இப்போ டியூஷன் போறதுக்கு தான் சைக்கிள் வேணும்னு கேட்டேன் என சொல்ல கோபி சரி வாங்கி தரேன் என சொல்கிறார்.

உடனே பக்கத்தில் இருந்த மயூ டாடி அப்போ எனக்கும் ஒரு சைக்கிள் வேண்டும் என கேட்க கோபி மறுப்பு சொல்ல முடியாமல் சரி வாங்கி தரேன் என சொல்கிறார்.

மறுநாள் காலையில் கோபி ஆபிசுக்கு கிளம்ப அப்போது வெளியே வரும் ராதிகா என்னை ஆபீஸ்ல டிராப் பண்ணிடுங்க இன்னைக்கு கேண்டீன் டெண்டர் வொர்க் இருக்கு என சொல்கிறார். திரும்பவும் பாக்கியலட்சுமி வருவாங்களோ என்று பயமா இருக்கு என ராதிகா சொல்ல அவளுக்கு டெண்டர்னா என்னன்னு தெரியாது அவ வரமாட்டா என கோபி ஆறுதல் கூறுகிறார். மறுபக்கம் பாக்கியா செல்வியுடன் டெண்டர் எடுக்க ஆபீசுக்கு கிளம்பி செல்கிறார்.

ஆபீஸில் ராதிகா பாக்கியலட்சுமியை பார்த்து தடுத்து நிறுத்துகிறார். எங்க வந்தீங்க என கேட்க இது ஆபீஸ் தானே, ஆபீசுக்கு தான் வந்தோம் என பதிலடி கொடுக்கின்றனர். இங்கு எந்த வேலையா வந்தீங்க என கேட்க டெண்டர் எடுக்க வந்தோம் என சொல்கின்றனர். பேப்பர்ல பாத்துட்டு சும்மா வந்தா எல்லாம் டெண்டர் கிடைக்காது. அதுக்கு நீங்க அப்ளை பண்ணி இருக்கணும் என சொல்ல அதெல்லாம் பண்ணிட்டு நீங்க போன் பண்ணதால் தான் வந்தோம் என பதிலடி கொடுத்து பாக்கியா உள்ளே செல்கிறார்.

பிறகு டெண்டர் தொடங்கி ராதிகாவின் பாஸ் ஒவ்வொருத்தராக அறிமுகம் செய்து கொள்ள சொல்ல பாக்யா தன்னை பற்றி அறிமுகம் செய்யும்போது முதலில் மசாலா பிசினஸ் ஆரம்பித்து அதன் பிறகு தான் என பேச ஆரம்பிக்க தடுத்து நிறுத்தும் ராதிகா உங்க ஆரம்ப கதை எல்லாம் கேட்கல என ஷாக் கொடுக்கிறார்.

பிறகு எல்லாரும் கொடுத்திருக்க தொகையை விட ஈஸ்வரி கேட்டரிங் குறைவான தொகையில் தரமான உணவை சப்ளை செய்வதாக தெரிவித்துள்ளனர் என சொல்ல பாக்கியா சந்தோஷப்படுகிறார். பிறகு எல்லோரையும் பத்து நிமிடம் வெளியே காத்திருக்க சொல்ல ராதிகா வெளிய வரும்போது டெண்டர் நமக்குத் தான் கிடைக்கும் என நினைப்பதாக பாக்கியா செல்வியிடம் சொல்கிறார்.

பிறகு மீண்டும் மீட்டிங் தொடங்க இந்த டெண்டரை நாங்க ஈஸ்வரி கேட்டரிங் கொடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கோம் என ராதிகாவின் பாஸ் சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.