ராதிகாவுக்கு பதிலடி கொடுக்க பாக்யா முடிவெடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த செய்தியலில் இன்றைய எபிசோடில் எழில் டிவி சேனலில் வேலைக்கு போக போவதாக சொல்ல பாக்யா உன்னுடைய ஆசை விட்டு விடமாட்டேன் என கேட்க கண்டிப்பா விடமாட்டேன் என சொல்கிறார்.

அதன் பிறகு சதீஷை பார்க்க வெளியே சென்று வருவதாக சொல்லி கிளம்ப அப்போது பேப்பரில் ராதிகாவின் ஆபீசில் கேண்டீன் டெண்டர் விடு போவதாக செய்தி வந்திருப்பதை பார்த்து பாக்யாவிடம் கூறுகிறார்.

அதன் பிறகு பாக்யா அந்த செய்தியை பார்த்து ஜெனியிடம் இதுக்கு நாம அப்ளை பண்ணலாமா என கேட்க ஜெனியும் பண்ணலாம் ஆன்ட்டி என சொல்கிறார். பிறகு ஜெனியை நீ கொஞ்சம் அப்ளை பண்றியா என பாக்கியா சொல்ல ஜெனி சரியென சொல்கிறார்.

அடுத்து இனியா டியூஷன் முடிந்து வரும் போது சரணிடம் பேசிக்கொண்டு நடந்து வருகிறார். அதன் பிறகு ஜெனி இந்த கேட்டரிங் காண்ட்ராக்ட்க்கு அப்ளை செய்து விட்டு வந்து பாக்யாவிடம் சொல்லும்போது இந்த கேட்டரிங் ஆர்டர் அவசியம் தேவையா என கேட்க திரும்பவும் ஒரு வாய்ப்பு வந்திருக்கு அதுக்காக வாங்கிய பணத்தை அந்த கேட்டரிங் ஆர்டர் எடுத்து தான் கட்ட வேண்டும் என இருக்கலாம்ல, அதனால முயற்சி பண்ணி பார்ப்போம் என உறுதியாக கூறுகிறார்.

அடுத்து நிலா பாப்பா ஈஸ்வரி ரூமுக்குள் சென்று சேட்டை செய்ய ஈஸ்வரி ஜெனியை கூப்பிட்டு குழந்தையை எதுக்கு சத்தம் போட பிறகு பாக்யா நீ வா பாப்பா பாட்டி சீக்கிரம் கோபத்தை மறந்து உன்னை தூக்கி மடியில் வைத்து கொஞ்சுவாங்க என சொல்லி தூக்கி வருகிறார். ஈஸ்வரி யாரும் இல்லாத போது நிலா பாப்பா செய்த சேட்டைகளை நினைத்து சிரிக்கிறார்.

மறுபக்கம் எழில் மற்றும் அமிர்தா என இருவரும் மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்கும் போது அமிர்தா நீங்க ஆசைப்பட்டு தான் இந்த வேலைக்கு போறீங்களா எனக்கு கேட்க ஆமா இதுல என்ன சந்தேகம் இதுவரைக்கும் நான் தனியா இருந்தேன் இப்போ என்னை நம்பி நீங்களும் நிலா பாப்பாவும் இருக்கீங்க நான் வேலைக்கு போகணும் என சொல்கிறார்.

அதன் பிறகு எழில் இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என அமிர்தாவின் அழகை வர்ணித்து ஒரு பாட்டு பாடுவதாக சொல்லி என்னை சாய்த்தாலே என்ற பாடலை பாடுகிறார். பிறகுதான் நீங்க இவ்வளவு ரொமாண்டிக் எனக்கு தெரியாது என சொல்ல இதைச் செழியன் எதிர்பாராத விதமாக பார்த்துவிட ஓ பாட்டு பாடினால் ரொமான்டிக்கா என சொல்லி கீழே வந்து ஜெனியை தேடுகிறார்.

ஜெனி ஹாலில் போனில் பேசிக் கொண்டிருக்க அங்கு வரும் செழியன் ஜெனியை போனை வைக்க சொல்லிவிட்டு ஜெனியினிடம் நீ இன்னைக்கு ரொம்ப அழகாக இருப்பதாக சொல்லி அவளை வர்ணித்து எழில் பாடிய அதே பாட்டை பாட அங்கு வரும் ஈஸ்வரி இதை பார்த்து கைதட்ட செழியன் வெட்கப்பட்டு சோபாவின் பின்னாடி ஒளிந்து கொள்கிறார்.

பிறகு ஈஸ்வரி செழியனை கலாய்க்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.